NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்தல் பணியில் ஈடுபட்டதால் வாக்களிக்கும் உரிமையை இழந்த ஆசிரியர்கள் - TNPTF கண்டனம்

      தேர்தல் பணியில் ஈடுபட்டதால் வாக்களிக்கும் உரிமையை இழந்த ஆசிரியர்கள். மௌனம் காத்த தேர்தல் ஆணையம்; TNPTF கண்டனம்

          சிவகங்கையில் 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களாக தேச பணியாற்றினர். இதில் சிவகங்கை மாவட்டத்தைச் சார்நத ஆசிரியர்கள் 80 சதவீதத்திற்கு மேல் பணியாற்றியதால் தொகுதிக்குள் பணியாற்றும் வாக்குச் சாவடியில் வாக்களிக்கும் விதமாக தேர்தல் பணிச் சான்று(EDC) வருவாய் துறையால் வழங்கப்பட்டது.
 
             அதற்கான முறையான படிவங்கள் முதல் தேர்தல் வகுப்பிலேயே அனைத்து ஆசிரியர்களும் தாங்கள் சார்ந்த சட்டமன்ற தொகுதியில் அளித்து விட்டனர். ஆசிரியர்களுக்கான EDC தேர்தல் பணிக்கு செல்லும்பொழுது அளிக்கப்படும் என வருவாய் துறை உறுதியளித்தது. தேர்தல் பணிக்கு அனைத்து ஆசிரியர்களும் 23.4.2014 அன்று தயாராக இருந்தபொழுது EDC வாங்க ஆசிரியர்கள் அங்குமிங்கும் அழைக்கழிக்கப்பட்டனர். குறிப்பாக சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு தங்கள் EDC வாங்க அழைந்தது பரிதாபமாக இருந்தது. இறுதியல் மண்டல அலுவலர்கள் மூலம் தாங்கள் பணியாற்றும் வாக்குச் சாவடிக்கே சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் EDC கொடுத்து விடப்படும் என வருவாய்துறை அலுவலர்களால் உறுதியளிக்கப்பட்டு வாக்குச் சாவடிகளுக்கு ஆசிரியர்கள் அனுப்பப்பட்டனர். 
 
            கொளுத்தும் வெயிலில் வாக்குச் சாவடி சென்றடைந்த ஆசிரியர்கள் தங்கள் தேசிய பணியினை கடமை உணர்வுடன் ஆற்றினர். தங்கள் ஜனநாயக கடமை ஆற்றுவதற்கு தங்களின் தேர்தல் பணிச் சான்றினை(EDC) மண்டல அலுவலர்களிடம் கேட்டபொழுது அடுத்த முறை வரும்பொழுது கொண்டு வருகிறேன் என்ற பதிலை தவிர மாற்று பதில் இல்லை. நம்மை தொடர்பு கொண்டு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்த பின்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த ஆட்சியர் அதற்கான நடவடிக்கை எடுத்ததன் பேரில் பாதிக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு EDC வழங்கப்பட்டது. ஆனால் காரைக்குடி தொகுதியிலிருந்து தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு வாக்குபதிவு நிறைவடையும் வரையில் EDC வழங்கப்படவில்லை. இது ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
             தேர்தல் ஆணையம் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டிய அவசியத்தை ஊடகங்கள் வழியாக, குறுந்தகவல்கள் வழியாக, சுவரொட்டிகள் வாயிலாக வலியுறுத்தி வந்த நிலையில் ஏன் இந்த அவலம்?. இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு ஆரம்ப - நடுநிலைப்பள்ளிகளிலும் வாக்களிக்கும் விழிப்புணர்வு முகாம் நடத்தி மாணவர்களின் பெற்றோர்களிடம் கையொப்பம் பெற்று தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்த ஆசிரியர்களின், இந்த தேசத்தின் மிகப்பெரிய தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த ஆசிரியர்களின் வாக்களிக்கும் உரிமையை பறித்தது யார் செய்த சதி? இதற்கு தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டாமா?. மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டால் EDC -i பொறுத்தவரை இனிமேல் ஒன்றும் செய்ய இயலாது என்ற பதிலே வருகிறது.
 
              தபால் வாக்கும் மாவட்டத்திற்குள் பணியாற்றினால் கொடுக்க இயலாது என்கிறது தேர்தல் ஆணையம். இதற்கு விடிவே கிடையாதா? ஒவ்வொரு தேசிய பணியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளும் ஆசிரியர் இனத்திற்கு இந்த நாட்டின் ஜனநாயக கடமைகளில் பங்கெடுக்க உரிமையில்லையா?. வாக்காளர் படடியலில் பெயர் இருந்தும், வாக்குச்சாவடி அலுவலராக நியமிக்கப்பட்ட ஒரு காரணத்திற்கான வாக்களிக்கும் உரிமையை இழந்து நிற்கும் எம் ஆசிரியர் இனத்தின் உரிமையை மீட்டு தருவது யார்?. இதற்கு காரணமான அதிகாரி தண்டிக்கப்பட வேண்டாமா? தேர்தல் ஆணையம் மௌனம் காப்பது நியாயமா? எப்போது விடியல்? எங்கள் உரிமையை பறித்த அதிகாரிகளை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண தேர்தல் ஆணையத்தை இயக்கம் கேட்டுக்கொள்கிறது.




6 Comments:

  1. எனக்கும் இதே நிலைதான். தேர்தல் பணிச் சான்றிதழுக்கு விண்ணப்பித்திருந்தும், சான்றிதழ் பெற முடியாத நிலை.
    தேர்தல்நாள் அன்று நாள் முழுதும், வாக்குச் சாவடிக்க உள்ளேயே இருந்தும், வாக்களிக்க இயலாத நிலை.
    வாக்குச் சாவடியில் பணியாற்றும் ஆசிரியர்கள்,அவர்கள் பணியாற்றும் , வாக்குச் சாவடியிலேயே , ஓட்டுப் போடலாம் என்று, பொதுவான ஆணை வெளியிட்டு, தேர்தல் ஆணையம் உதவிடவேண்டும்.

    ReplyDelete
  2. எனக்கும் இதே நிலைதான். தேர்தல் பணிச் சான்றிதழுக்கு விண்ணப்பித்திருந்தும், சான்றிதழ் பெற முடியாத நிலை.
    தேர்தல்நாள் அன்று நாள் முழுதும், வாக்குச் சாவடிக்க உள்ளேயே இருந்தும், வாக்களிக்க இயலாத நிலை.
    வாக்குச் சாவடியில் பணியாற்றும் ஆசிரியர்கள்,அவர்கள் பணியாற்றும் , வாக்குச் சாவடியிலேயே , ஓட்டுப் போடலாம் என்று, பொதுவான ஆணை வெளியிட்டு, தேர்தல் ஆணையம் உதவிடவேண்டும்.

    ReplyDelete
  3. தேர்தல் பணி - வாக்குச்சாவடி அலுவலர்களின் அவலம்.
    _______________________________________________________


    மக்களவைத்தேர்தல் வெற்றிகரமாக நடத்திமுடித்த ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு வாழ்த்துக்கள்.
    மக்களவைத்தேர்தல் நடத்த அரசு பல ஆயிரம் கோடி செலவுசெய்கிறது.தேர்தல் ஆணையம் அதை வெற்றிகரமாக நடத்தி மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து புதிய அரசு அமைக்க உதவுகிறது.அவைஉறுப்பினர்களை தேர்ந்தெடுக்க பல இலட்சம் அரசு ஊழியர்கள் இரவு பகல் என்று பாராமல் பணியாற்றுகிறார்கள். ஆனால் அவர்களின் தேவைகளை புரிந்து கொள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள் தயாராக இல்லை.மாநில தேர்தல் ஆணையர் அவர்கள் ஒவ்வொரு நாளும் தேர்தல் விதிமுறைகள் பற்றி அறிவித்தவண்னம் உள்ளார்.அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல.தேர்தல் நடத்தும் அரசு ஊழியர்களுக்கும் தான்.தேர்தல் அணைய ஊழியர் என்று த்னியாக யாருமில்லை.தேர்தல் தேதி அறிவித்த பிறகு அனைத்து அரசு ஊழியர்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவார்கள்.ஆனால் வருவாய்த்துறை ஊழியர்கள் மட்டும்தான் தேர்தல் ஆணைய ஊழியர்கள்போல் நடந்துகொள்ளும் விதம் மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது.மாநிலத்தேர்தல் ஆணையர் அவர்கள் ஒவ்வொரு நாளும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பற்றி அறிவிப்பு செய்துகொண்டே இருந்தார்.இந்த அறிவிப்பு அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல தேர்தல் நடத்தும் அரசு ஊழியர்களுக்கும் தான்.அதில் வாக்குச்சாவடியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் தான்.குறிப்பாக வாக்குச்சாவடியில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கும் தான்.தான் பணியாற்றும் இடம் அல்லது வசிக்கும் இடத்திலிருந்து அருகில் உள்ள வாக்குச்சாவடியில் பணியமர்த்துவது,இரவில் வாக்குச் சாவடியில் தங்கவேண்டிய அவசியம் இலலை என்ற அறிவிப்பு,கற்பிணிபெண்கள் மற்றும் உடல்நிலைசரியில்லாதோர் போன்றோருக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு,பணிபுரியும் வாக்குச்சாவடியில் கழிப்பிடவசதி,குடிநீர் வசதி ஏற்படுத்திதரப்படும் போன்ற அறிவிப்புகள் அறிவிப்புகளாக மட்டுமே இருந்தது.இதை நடைமுறைபடுத்த வேண்டிய வருவாய்த்துறை ஊழியர்கள் ஒவ்வொருவரும் ஆணையர்கள் போல் நடந்துகொண்டது மனவருத்ததை ஏற்ப்படுத்துகிறது.ஆணையர் கூட அமைதியாக சிரித்த முகத்தோடுதான் பேசுகிறார்.ஆனால் வருவாய் ஊழியர்களின் போக்கு கொடுமையிலும் கொடுமை.தேர்தல் பணியாற்ற விண்ணப்பம் பெரும் பொழுதே தங்களுக்கு வேண்டப்பட்டவர்களின் விண்ணப்பத்தை சேர்ப்பது கிடையாது.மற்றவர்களில் உடல் நலம் சரியில்லாமல் இருந்தாலும் கட்டாயம் தேர்தல் பணியாற்றவேண்டும் இல்லைஎன்றால் வேலையேபோய்விடும் என்றுமிரட்டுவது சர்வசாதாரணமாகும்.சரி தேசப்பணி என்று பொறுத்து பணியாற்றலாம் என்றால் பெண் ஊழியர்கள் பெறும்பாலோருக்கு 100 கி.மீட்டருக்கு அப்பால் பணி நியமணம்,அவர்களுக்கு யார் பாதுகாப்புகொடுப்பது.அவர்கள் இரவில் எங்கே தங்குவார்கள்,பக்கத்துவீட்டாரிடம் போய் பிச்சைக்காரர் போல் இன்று இங்கே தங்கிக்கொள்ளளாமா என்று கேட்பது கேவலமாக உள்ளது.ரிசர்வ் பணியாளர்கள் வருவாய் ஊழியர்களிடம் படும் அவமானம்.இரவில் தங்குவதற்கு இடவசதி ஏற்பாடு செய்வது இல்லை.எங்கே தங்குவார்கள்.இயற்கை உபாதைகளுக்கு எங்கே போவார்கள்.ஓசியில் வரும் பணம் தானே என்று கூறுவது இன்னும் வேதனை.வாக்குச்சாவடியில் நிலை அலுவலர்கள் ஒருவர் இருக்கிறார்.அவர்கள் பணியாற்றும் அலுவலர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் ஆனால் பல இடங்களில் குடி நீரையே தாங்களே ஏற்பாடு செய்து கொண்ட அவலமும் உண்டு.சாப்பாடு இல்லாமல் பட்டினியாகவே பணியாற்றிய அவலம் எனக்கு உண்டு.அரசியல்வாதிகளின் முகவர்கள் தான் பல இடங்களில் உணவு ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள்.அனால் ஆணையமோ முகவர்களிடம் டீ,சாப்பாடு போன்றவற்றை பெறக்கூடாது என்று கூறுகிறது.அப்படியானால் ஊழியர்களுக்கு யார் ஏற்பாடு செய்வது .ஊழியர்களின் தேவைகள் பற்றி ஆணையம் கவனத்தில் கொள்வது இல்லை.பணீமுடிந்து வீடு திரும்ப நல்லிரவு.யார் பாதுகாப்பு.வாகன ஏற்பாடும் இல்லை .எப்படியோ தேர்தல் முடிந்து பெட்டி வந்தால் சரி ஊழியர்கள் பற்றி கவலையில்லை. முடிவு பூங்க்கொடி என்ற ஆசிரியரின் மரணம். விழித்துக்கொள்ளட்டும் ஆணையம் ஊழியர்களின் பாதுகாப்பில். இவ்வளவு கொடுமையையும் தாங்கி வெற்றிகரமாக பணியாற்றிய அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. இனிவரும் தேர்தல்களில் நாம் பணியாற்ற மாட்டோம் என்று அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம் .

    ReplyDelete
  5. we lost our rights to vote.really it is very shame.

    ReplyDelete
  6. Even they doesn't get my ballot application from our taluk and they don't inform us properly that when v have to submit the ballot application if v fail to go election duty they will punish us but they fail to inform about the submission date is it beauty for the election commission even they failed that about postal ballot candidates list I feel bad that an educated person couldn't vote

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive