பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் திங்கள்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம்
என்று காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம்
மாவட்டத்தில் 12, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வருகிற செப்டம்பர்
28-ஆம் தேதி முதல் அக்டோபர் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இத்தேர்வினை
எழுத விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான 12-ஆம் வகுப்பு தனித் தேர்வர்கள்
திங்கள்கிழமைக்குள்ளும் (ஆகஸ்ட் 17), 10-ஆம் வகுப்பு மாணவர்கள் வரும்
26-ஆம் தேதிக்குள்ளும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இணையதளம் மூலம் பதிவு செய்யும் மையங்கள்: செங்கல்பட்டு கல்வி
மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் செங்கல்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி
(மாணவிகள் மட்டும்), செங்கல்பட்டு செயின்ட் கொலம்பஸ் மேல்நிலைப் பள்ளி
(மாணவர்கள் மட்டும்), மதுராந்தகம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி (இரு
பாலரும்), சென்னை பல்லாவரம் செயின்ட் செபாஸ்டியன் மெட்ரிக்.
மேல்நிலைப்பள்ளி (இருபாலரும்) விண்ணப்பிக்கலாம்.
காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் உத்தரமேரூர் அரசு
மகளிர் மேல்நிலைப் பள்ளி (இரு பாலரும்), காஞ்சிபுரம் டாக்டர் பி.எஸ்.எஸ்.
நகராட்சி மேல்நிலைப் பள்ளி (மாணவிகள் மட்டும்), காஞ்சிபுரம் ஸ்ரீ
நாராயணகுரு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி (மாணவர்கள் மட்டும்),
ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (இரு பாலரும்)
விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...