Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளிகளில் ஆர்டர்லியாக மாறும் உடற்கல்வி ஆசிரியர்கள்.

              அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை,உடற்கல்வி வகுப்பு கட்டாய மாக்கப்பட்டு உள்ளது. சி.சி.இ., எனப்படும் தொடர் செயல்மதிப்பீட்டு முறையில் உடற்கல்விக்கு மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதற்கென ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, வாரம் தோறும் இரண்டு பாடப்பிரிவுகள் ஒதுக்கப்பட்டு, உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பயிற்சி அளிக்க வேண்டும். ஒரு வகுப்பு, &'தியரி&'யாகவும், மற்றொரு வகுப்பு மைதானப் பயிற்சியாகவும்இருக்க வேண்டும்.


          விளையாட்டில் சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்து, மாலை வேளைகளில் சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும். காலியாக உள்ளன: இதற்காக, 6முதல் 8ம் வகுப்பு வரை, 5,600 உடற்கல்வி ஆசிரியர்களும், 9, 10ம் வகுப்பு வரை பயிற்சி அளிக்க, உடற்கல்வி இயக்குனர் நிலை - 2 பதவியில், 89 பேரும், பிளஸ் 2 வரை எடுக்க, முதுநிலை முடித்த உடற்கல்வி ஆசிரியர்கள், 525 பேரும் பணியாற்றுகின்றனர். அதேநேரம், ஆயிரக்கணக்கான உடற்கல்வி ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன; அவை நிரப்பப்படவில்லை. உடற்கல்விக்காக பள்ளிக்கல்வியில் பாடத்திட்டம் உருவாக்கியுள்ள போதும், இந்தபாடத்திட்டம் என்னவென்றே பெரும்பாலான ஆசிரியர்களுக்குத் தெரியவில்லை. அதற்கான புத்தகங்களோ, வழிகாட்டுதல்களோ, தலைமை ஆசிரியர்களால் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து, உடற்கல்வி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் மாநில விளையாட்டுப் போட்டிக்கு தயாராவது சவாலாக உள்ளது. அரசிலிருந்து வரும் நிதியை, பல பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சரியாக செலவிடுவதில்லை. விளையாட்டுப் பொருட்கள் வாங்க அனுமதி அளிப்பது இல்லை. விளையாட்டுப் பாடப் பிரிவில், மற்ற ஆசிரியர்களை வைத்து, ஏதாவது பாடம் எடுக்க சொல்கின்றனர்.பல நேரங்களில், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வேறு பணிகளை கொடுத்து, பள்ளிக்கு வெளியே அனுப்பி விடுவதால், அந்த பாடப்பிரிவில், மாணவர்கள் பாடத்தையும் படிக்காமல், விளையாட்டுப் பயிற்சியும் பெறாமல், வகுப்பில் கூச்சல் போடும் அவலம் ஏற்படுகிறது. அதனால், தனியார் பள்ளிகள் விளையாட்டுப் போட்டிகளில் மிக எளிதாக வெற்றி பெற்று, அரசுப் பள்ளிகளை பின்னுக்குத்தள்ளி விடுகின்றன. இதற்கு மாவட்ட அளவில் பல கல்வி அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். அரசு நிர்ணயித்த புதிய விளையாட்டுகளான, பென்சிங் (வாள் சண்டை), செஸ், ஸ்கேட்டிங்போன்ற, 23 வகை விளையாட்டுகளுக்கு, எந்த உபகரணங்களையும் அரசு வழங்கவில்லை.
இந்த விளையாட்டுகளை ஆசிரியர்கள் கற்றுத் தர பள்ளிகள் அனுமதிப்பதில்லை. மாறாக கல்வித்துறை அதிகாரி களுக்கு, &'ஆர்டர்லி&' உதவியாளர் போன்றும், கல்வித்துறை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல் போன்ற பிற பணிகளுக்கும், உடற்கல்வி ஆசிரியர்களைப் பயன்படுத்துவதால், உடற்கல்வி என்பதுஅரசுப் பள்ளிகளில் இனி இருக்காது என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பாடத் திட்டம், புத்தகம், விளையாட்டுப் பொருட்கள் இல்லாததால், விளையாட்டு பயிற்சிஆசிரியர்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாகவும், ஆர்டர்லியாகவும், மாறியுள்ளனர். இதனால், விளையாட்டுப் போட்டிகளில், தனியார் பள்ளி மாணவர்களை விட அரசுப் பள்ளி மாணவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதர பணிகள் என்ன? மாவட்ட, முதன்மைக் கல்வி அலுவலகப் பணிகளுக்கு, பள்ளியின் பிரதிநிதியாக செல்வது. பள்ளி, கல்வி அலுவலகங்களில் குடிநீர், மின் வசதி ஏற்படுத்துதல். பள்ளி வளாகத்தில் குப்பை அகற்றுதல், சுத்தப்படுத்தும் பணிகளை ஆட்கள் மூலம் மேற்கொள்வது. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும் விழாக்களுக்கு, கண்காணிப்பாளர் பணி. பள்ளிக்கல்வி உயரதிகாரிகளின் தனிப்பட்ட சொந்தப் பணிகளை கவனித்தல்.
இலவசத் திட்டப் பொருட்களை சம்பந்தப்பட்ட மையங்களிலிருந்து கொண்டு வருவது. வங்கிப் பணிகள், ஆவண நகல் எடுத்தல் போன்ற பணிகளை, உதவியாளருக்கு பதில் மேற்கொள்வது. எழுத்தர் இடம் காலியான பள்ளிகளில், கல்வித் துறை அலுவலகங்களுக்கு கோப்பு களை சுமந்து செல்வது. தேர்வுத் துறை அலுவலகங்களுக்கு சென்று வருவது போன்ற பணிகள், பல்வேறு உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, பல்வேறு விதமாக வழங்கப்படுகின்றன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive