Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

செங்கமல நாச்சியார்

         1992 ஆம் வருடம். ஒரு தனியார் ஆங்கிலப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டு இருந்தேன்.அப்போது ஒரு நாள் வழக்கம் போல 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டு இருந்தேன்.. "பிரின்ஸ்பால் கூப்பிடுறாரு " என்று அட்டண்டர் வந்து கூறினார்.

             அதுதான் முதல் தடவை என்னைக் கூப்பிட்டு அனுப்பியது.உள்ளே போனேன்,"ஸ்டூடண்ட்ஸ் உங்ககிட்ட க்ளோசா பழகுறாங்களாமே"! "இனிமே பழக மாட்டேன் சார்". "அதுக்கில்ல ,கேள்விப் பட்டு இருப்பீங்க,சீனியர்ஸ் நீங்க சொன்னா பிரச்சினை வராதுன்னு சொல்றாங்க; சோ,பேரண்ட்ஸ் காதுக்குப் போகாம பாத்துக்கோங்க" என்று சொன்னார்.எனக்கு பயமாக இருந்தது,யாருக்குச் சொல்ல?எப்படிச் சொல்ல? வகுப்பில் நுழைந்தேன்.எதுவும் சொல்லாமல் பாடம் முடித்தேன்..! காதல் பிரச்சினை .பொதுவாக ஆரம்பித்தேன்.டிவி யில லவ் ஸ்டோரியா போடுறாங்க .பாக்கவே புடிக்கல.உங்க வீட்டுல எப்படி? எல்லாரும் பாப்பாங்களா ? ஆளாளுக்கு இஷ்ட்டமா பேசினாங்க.கடைசியில் சொன்னேன்."எனக்குத் தெரிஞ்சவங்க வீட்டுல ஒரு பையன் ஒன்பது படிக்கிறான்.இப்பவே காதலிக்கிறேன்னு சொல்றான்.நானும் சரிப்பா வா,பிள்ளையார் கோயில்ல கல்யாணம் பண்ணி வக்கிறேன்.நீ டவுசர் போட்ட சின்னப் பையன்,உனக்கு யார் வீடு தருவா?அவளுக்கு எப்படி சாப்பாடு போடுவ?நீ என்ன வேலக்கி போவ? உன்னை விட பெரிய பசங்க அவள கடத்திட்டி எப்பிடி காப்பாத்துவ ன்னு கேட்டேன்.அவன் அழுதுட்டான்.இனிமே நான் நல்லா படிப்பேன்னு சொல்லிட்டுப் போனான்.அவன்ட்ட நான் இப்படிப் பேசியது சரியா ? என்று ஒரு கற்பனைக் கதையைக் கூறினேன்.ரெம்பச் சரி என்றார்கள். மறு நாள் ஸ்டாப் ருமில் நான் மட்டும் இருக்கும் போது அந்த மாணவன் வந்தான்."மிஸ் எனக்குத் தெரியும் அந்த கதை எனக்குத் தானே " என்றான்.ஆமாம் தங்கம் ,நீ வாழ்க்கையில் படித்து முன்னேறு,அப்பவும் இந்தக் காதல் இருந்தால் நான் வந்து பேசி முடிக்கிறேன் ,இது காதல் இல்லய்யா என்றேன் . அவன் கண்கள் கலங்கியது.அழாத சாமி..நீ ரெம்ப நல்ல பையன்.,படி பின்னாட்களில் உன் திருமணத்திற்கு நானிருக்கேன்" என்று பிரச்சினையை முடித்தேன். 2009 ஆம் ஆண்டு சேலம் ரயில்வே ஸ்டேசன் ரயில் பெட்டிக்குள் இருந்துஒருவர் வேகமாக இறங்கி வந்து காலைத் தொட்டு வணங்கினார்.ஐயோ,யாரு,எந்திரிங்க என்றேன்.என்னைத் தெரியலியா என்றார். தெரியலியே என்றேன்.பெயரை,ஸ்கூலைச் சொன்னவுடன் நினைவு வந்தது . அவருடன் ஒரு போலீஸ் இருந்தார். நான் மாஜிஸ்ட்ரேட்டாக இருக்கேன்மா என்றார் 9 ஆம் வகுப்பில் காதல் செய்த என் மாணவன், அவளைத் திருமணம் செய்தாயா ? என்றேன் . வளர்ந்த பின் புரிந்து கொண்டேன் அவளுக்கு திருமணம் ஆகி இன்ன ஊர்ல இருக்கா ,எனக்கும் திருமணம் ஆகிக் குழந்தை இருக்கான்.உங்கள் பெயரின் முதல் எழுத்து அவன் பெயரின் முதல் எழுத்து என்ற போது பேசவே வாய் வரவில்லை. என் கணவரும் உடன் இருந்தார்.என் மாணவர்களால் எனக்கு வீட்டிலும் மதிப்பு உண்டாகிறது .இன்னொரு ஜென்மத்திலும் இதே பெண்ணாகப் பிறக்க வேண்டும் என்று வேண்டிய தருணங்களில் இதுவும் ஒன்று..!





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive