Home »
» பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் கட்டணங்களை செலுத்த டிசம்பர் 2ம் தேதி வரை அவகாசம்
சென்னையில், தொலைபேசி மற்றும் செல்போன் கட்டணங்களை செலுத்த டிசம்பர் 2ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் கலாவதி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை முடியும் வரை, தொலைபேசி சேவையில் பாதிப்பு ஏற்பட்டால், 94455 01500 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும், எஸ்எம்எஸ், வாட்ஸ் அப் மூலமாகவும் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.பிஎஸ்என்எல் செல்போன் கட்டணம் செலுத்த 16ம் தேதியும், தொலைபேசி கட்டணத்தை செலுத்த 26ம் தேதியும் கடைசி தேதியாக இருந்த நிலையில், கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் டிசம்பர் 2ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலாவதி கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...