Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப் பள்ளிகளை பாதுகாக்க விழிப்புணர்வு இயக்கம்

அரசுப் பள்ளிகளை பாதுகாக்க விழிப்புணர்வு இயக்கம் நடத்துவதென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தீர்மானித்துள்ளது.புதுக்கோட்டையில் மாநிலத் தலைவர் எஸ். மோகனா தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், விரைவில் மத்திய அரசால் கொண்டுவரப்படவுள்ள புதிய கல்விக்கொள்கையின் பாதகமான அம்சங்கள் குறித்து மக்களிடையே பிரசாரம் மேற்கொள்வது, அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க விழிப்புணர்வு இயக்கம் நடத்துவது. தமிழகம் முழுவதும் மதச்சார்பின்மையை பாதுகாக்கும் வகையிலும், மூடநம்பிக்கைக்கு எதிராகவும் பிரசாரம் மேற்கொள்வது.

2015-ஆம் வருடத்தை ஒளி- ஒளித் தொழிநுட்பங்களுக்குமான சர்வதேச ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளதால், ஒளியின் தன்மை மற்றும் பயன்கள் குறித்து பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் அ. அமலராஜன் அறிக்கை சமர்ப்பித்தார். 

மாநிலப் பொருளாளர் கே. செந்தமிழ்ச்செல்வன் நிதி மேலாண்மை குறித்துப் பேசினார்.கூட்டத்தில் 65 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாவட்டத்தலைவர் அ. மணவாளன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் சுபா, கவனகன், முனைவர் எஸ். தினகரன், மாநிலச் செயலாளர்கள் எஸ்.டி. பாலகிருஷ்ணன், எம்.எஸ். ஸ்டீபன்நாதன், எம். தியாகராஜன், டி. சுந்தர், டி. சாந்தி, வெண்ணிலா ஆகியோர் பங்கேற்றனர்.புதுக்கோட்டை அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்கள் எம். வீரமுத்து, எம். குமரேசன், கா. ஜெயபாலன், சி. சேதுராமன், க. உஷாநந்தினி, பவனம்மாள் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive