Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பட்டாசு வெடிக்கும்போது கவனம் டாக்டர்கள் எச்சரிக்கை

       விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பட்டாசு வெடிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்; காயம் ஏற்பட்டால், தண்ணீர் மட்டும் ஊற்றுங்கள்; வேறு ஏதும் தடவக்கூடாது' என, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

         சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் தீக்காயம் மற்றும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறைத் தலைவர் நிர்மலா பொன்னம்பலம் கூறியதாவது:தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது வழக்கம். அதே நேரத்தில், விபத்துகள் ஏற்படாமல் வெடிப்பது அவசியம். சில ஆண்டுகளாக, விபத்துகளால் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றாலும், பொதுமக்கள் விழிப்போடு இருப்பது அவசியம்.

என்ன செய்யலாம்?
* திறந்த வெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும்
* சிறுவர்கள், பெரியோர் கண்காணிப்பில் தான் பட்டாசு வெடிக்க வேண்டும்
* ஒரு பக்கெட் தண்ணீர் அருகில் வைத்திருக்க வேண்டும்
* முதல் உதவி பெட்டி வைத்திருப்பது நல்லது
* பட்டாசு அருகில் சென்று தீ பற்ற வைக்காமல், நீண்ட குச்சியை பயன்படுத்த வேண்டும்
* குனிந்து பார்த்து பட்டாசு வெடிக்க வேண்டாம்; முகத்தில் பாதிப்பு ஏற்படும்
* காலணிகள் அணிந்திருக்க வேண்டும்; இறுக்கமான பருத்தி ஆடைகள் அணிய வேண்டும்
* தீக்காயம் ஏற்பட்டால், அந்த இடத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டும். உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை பெற வேண்டும்.

என்ன செய்யக்கூடாது?

* பட்டாசுகளை சட்டைப்பைகளில் வைத்து கொண்டு செல்லக் கூடாது
* தளர்வான ஆடைகள் அணிய வேண்டாம்; எளிதில் தீப்பற்றும் பொருட்களை அருகில் வைக்க வேண்டாம்
* வீடுகளின் உள் பகுதியில் பட்டாசு வெடிக்கக்கூடாது. பட்டாசு வெடிக்கும் இடத்தில் மெழுகுவர்த்தி, கெரசின் விளக்குகளை பயன்படுத்த வேண்டாம்
* முகத்தின் அருகே, பட்டாசை கொண்டு செல்லக்கூடாது; கையில் பிடித்து பட்டாசு வெடிக்கக் கூடாது
* வெடிக்காத வெடிகளை விட்டு விடுங்கள்; மீண்டும் வெடிக்க வைக்க முயற்சிக்கக் கூடாது
* தீக்காயத்தின் மீது மை, மண், மஞ்சள் தடவக்கூடாது. முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் கண்களை கசக்கக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive