NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பி.சி., - எம்.பி.சி., பிரிவுக்கு இன்று கலந்தாய்வு : 530 எம்.பி.பி.எஸ்., இடம் இருக்கிறது

            மருத்துவ படிப்பில், பொது பிரிவுக்கான கலந்தாய்வு முடிந்த நிலையில், இன்று, பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம், மிக பிற்படுத்தப்பட்டோருக்கான கலந்தாய்வு நடக்கிறது. 
 
              அரசிடம், 530 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னை, அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடந்து வருகிறது. மூன்று நாட்கள் நடந்த பொதுப்பிரிவு கலந்தாய்வு, நேற்றுடன் முடிந்தது. நேற்று, 722 பேர் பங்கேற்றதில், 519 பேருக்கு மட்டுமே இடங்கள் ஒதுக்கப்பட்டன.அரசு கல்லூரிகளில், 225; சுய நிதி கல்லுாரிகளில், 233; இ.எஸ்.ஐ., கல்லுாரியில், 15 பேர், எம்.பி.பி.எஸ்., இடங்களையும், அரசு பல் மருத்துவ கல்லூரியில், 46 பேர், பி.டி.எஸ்., படிப்பையும் தேர்வு செய்தனர். மீதி உள்ள இடங்கள் எம்.பி.பி.எஸ்., படிப்பில், அரசு கல்லூரியில், 530; சுய நிதி கல்லூரிகளில், 201, இ.எஸ்.ஐ., கல்லூரிகளில், 25 இடங்கள் உள்ளன; 36 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இன்று, பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம், மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான, கலந்தாய்வு நடக்கிறது. இதற்கு, 650 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட கலந்தாய்வு, நாளை நிறைவடைகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive