NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங் இன்று நிறைவு

          தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கவுன்சிலிங், இம்மாதம், 20ம் தேதி, சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் துவங்கியது. 
 
            சிறப்பு பிரிவினர், பொது பிரிவுகளுக்கான கவுன்சிலிங் முடிந்த நிலையில், நேற்று பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான கவுன்சிலிங் நடந்தது.

மொத்தம், 653 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். 45 பேர் தவிர, 608 பேர் வந்திருந்தனர். அரசு கல்லூரிகளில், 176; இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரியில், 12; சுயநிதி
கல்லூரிகளில், 65 பேர் எம்.பி.பி.எஸ்., படிப்பிலும்; அரசு பல் மருத்துவக் கல்லூரியில், 15 பேர் பி.டி.எஸ்., படிப்பிலும் என, மொத்தம், 266 பேர் இட ஒதுக்கீடு பெற்றனர். 340 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இன்னும் அரசு கல்லூரிகளில், 272; இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரிகளில், 10; சுயநிதி கல்லூரிகளில், 72 எம்.பி.பி.எஸ்.,
இடங்களும்; அரசு பல் மருத்துவக் கல்லூரியில், 13 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. இன்று, ஆதிதிராவிடர், அருந்ததியினர், பழங்குடியினருக்கான கவுன்சிலிங் நடக்கிறது.
இதற்கு, 534 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இன்றுடன் மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் நிறைவடைகிறது. 'காலி இடங்கள் இருந்தால், இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தி நிரப்பப்படும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive