Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பயிற்சிக் கூட்டம்

உள்ளாட்சித் தேர்தல் 2016-க்கான பயிற்சிக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
           திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமை வகித்தார். 
 
          அப்போது அவர் பேசியதாவது:வருகிற அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரித்தல் பணியில் இன சுழற்சி இட ஒதுக்கீடு தொடர்பான தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், ஆயத்தப் பணிக்கான பயிற்சி ஆகியவற்றை 100 சதவீதம் கவனமுடனும், சிறப்பாகவும் செய்ய வேண்டும். அனைத்து மண்டல அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் பணிபுரிய வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜவேலு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (ஊராட்சிகள்) மைதிலி, உதவி இயக்குநர் (ஊராட்சி) ஏ.ஜாகீர் உசேன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive