நாகர்கோவில்:கைகள் இரண்டும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி மாணவர் தனது காலால் பிளஸ் 2 தேர்வை எழுதி வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே சரல்விளையை சேர்ந்தவர் எலியாஸ்.
கூலித்தொழலாளி. இவரது நான்காவது மகன் பிளஸ்சிங் சஜூ 17.இவர் பிறக்கும் போதே
இரண்டு கைகளும் இல்லை.
இதனால் மனம் தளராத அவர், கைகளால் செய்ய வேண்டிய
வேலைகளை காலால் செய்து பழகினார். அதுபோல எழுதுவதிலும் பயிற்சி பெற்றார்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 386 மதிப்பெண் பெற்றார்.
பிளஸ் 2 வில் அறிவியல் பாடப்பிரிவு தேர்வு செய்தால் பிராக்டிகல் தேர்வு
வரும் என்பதால் வணிகவியல் பாடத்தை தேர்வு செய்து படித்தார். தற்போது தக்கலை
அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் பிளஸ் 2 தேர்வை காலால் தேர்வு
எழுதி வருகிறார். உதவிக்கு ஒருவரை வைத்து தேர்வு எழுதாமல் தனது காலாலேயே
தேர்வு எழுதும் மாணவர் பிளஸ்சிங் சஜூவின் நம்பிக்கை வீண் போகாது, என
ஆசிரியர்கள் பாராட்டினர்.







வாழ்த்துக்கள்
ReplyDelete