Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? சில டிப்ஸ் உங்களுக்கு..

   

     பல்வேறு வழக்குகளாலும் அரசியல் சூழ்நிலைகளாலும் தள்ளிக்கொண்டே போனது ஆசிரியர் தகுதித் தேர்வு.
          ஆசிரியர் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்த பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை ஒருவழியாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுவிட்டது. இது ஆசிரியப் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி.
அதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு ஏப்ரல் 30-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
கல்வித்தகுதி
இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை ஆசிரியர் பயிற்சிப் பட்டயம் (D.T.Ed.) முடித்தவர்கள் எழுதலாம். பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வை இளங்கலை பட்டப்படிப்புடன் B.Ed முடித்தவர்கள் எழுதலாம். தமிழ் இலக்கியப் படிப்பைப் பொறுத்தவரையில், B.Lit. பட்டத்துடன் B.Ed. அல்லது D.T.Ed. அல்லது தமிழ்ப் புலவர் பயிற்சி (தமிழ் பண்டிட் பயிற்சி) படித்தவர்கள் எழுதலாம். தற்போது இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
இதற்கான விண்ணப்பப் படிவங்கள் 22.3.2017ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 23.3.2017ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப விளக்கவுரை, விண்ணப்பம் வழங்கப்படும் மையங்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் இடங்கள் பற்றிய விவரங்களை http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
தேர்வு முறை
ஆசிரியர் தகுதித் தேர்வு மூன்று பிரிவு களில் நடைபெறும். ஆசிரியர் பயிற்சிப் பட்டயம் (D.T.Ed) படித்தவர்கள் தாள் ஒன்றினை எழுத வேண்டும்.கலைப்பட்டதாரி ஆசிரியர்கள் (B.A. + B.Ed.) மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் (B.Sc. + B.Ed) தாள் இரண்டுஎழுத வேண்டும்.
மூன்று பிரிவுகளுக்கான தாள்களுமே 150 கேள்விகள் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண்.
முதல் தாள் 5 பிரிவுகள் கொண்டதாக இருக்கும்
தமிழ் - 30 மதிப்பெண்கள்
ஆங்கிலம் - 30 மதிப்பெண்கள்
குழந்தை வளர்ப்பு உளவியல் - 30 மதிப்பெண்கள்
கணிதம் - 30 மதிப்பெண்கள்
சூழ்நிலையியல்/அறிவியல் - 30 மதிப்பெண்கள்
ஆக மொத்தம் = 150 மதிப்பெண்கள்
இரண்டாம் தாள் கலைப் பிரிவு, நான்கு பிரிவுகள் கொண்டதாக இருக்கும்
தமிழ் - 30 மதிப்பெண்கள்
ஆங்கிலம் - 30 மதிப்பெண்கள்
குழந்தை வளர்ப்பு உளவியல் - 30 மதிப்பெண்கள்
சமூக அறிவியல் - 60 மதிப்பெண்கள்
ஆக மொத்தம் = 150 மதிப்பெண்கள்
இரண்டாம் தாள் அறிவியல் பிரிவு, நான்கு
பிரிவுகள் கொண்டதாக இருக்கும்
தமிழ் - 30 மதிப்பெண்கள்
ஆங்கிலம் - 30 மதிப்பெண்கள்
குழந்தை வளர்ப்பு உளவியல் - 30 மதிப்பெண்கள்
கணிதம் மற்றும் அறிவியல் - 60 மதிப்பெண்கள்
ஆக மொத்தம் = 150 மதிப்பெண்கள்
வெறுமனே ‘ஜஸ்ட் பாஸ்’ என்பது வேலை பெறுவதற்கு உதவி செய்யாது என்பதைத் தேர்வர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு வேலை வாய்ப்பு பெறுவதற்கு ‘வெயிட்டேஜ்’ முறையைத் தமிழக அரசு பின்பற்றுகிறது.
முதல் தாளில் வெற்றி பெற்று, இடைநிலை ஆசிரியராக விரும்புபவர்களுக்கு, அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 15 சதவீதமும், பட்டயப்படிப்பு மதிப்பெண்களில் இருந்து 25 சதவீதமும், தகுதித் தேர்வு மதிப்பெண்களில் இருந்து 60 சதவீதமும் ‘வெயிட்டேஜ்’ முறையில் மதிப்பெண்களின்படி வேலைக்கான தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்படும்.
இரண்டாம் தாளில் வெற்றி பெற்று பட்டதாரி ஆசிரியராக விரும்புபவர்களுக்கு அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 10 சதவீதமும், டிகிரி மதிப்பெண்களில் இருந்து 15 சதவீதமும், பி.எட்.மதிப்பெண்கள் 15 சதவீதமும், தகுதித் தேர்வு மதிப்பெண்களில் இருந்து 60 சதவீதமும் என்ற அளவில் ‘வெயிட்டேஜ்’ முறையில் மதிப்பெண்களின்படி வேலைக்கான தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்படும்.
+2, டிகிரி மதிப்பெண்கள் எல்லாம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டவை. இனிமேல் அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. தகுதித் தேர்வில் நாம் எவ்வளவு அதிகம் மதிப்பெண்கள் பெறுகிறோம் என்பதை வைத்துத்தான் நம் வேலை வாய்ப்பை உறுதி செய்யமுடியும்.
ஆக, ஆசிரியர் வேலை தேடுவோர் கையில் உள்ள ஒரே மந்திரக்கோல், தகுதித் தேர்வு மட்டுமே!. மொத்தமுள்ள 150 கேள்விகளுக்கு 130 மதிப்பெண்களையாவது தாண்டினால்தான் அரசு ஆசிரியர் பணியை நோக்கி நெருங்க முடியும். எனவே, தகுதித் தேர்வுக்குத் திட்டமிட்டு சரியாக, நிறைவாக தயாராக வேண்டும்.
மூன்று தாள்களுக்கும், தமிழ், ஆங்கிலம், உளவியல் ஆகியவை பொதுவானவை. தமிழ்ப் பாடத்திற்கு ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களை முழுமையாகப் படிக்க வேண்டும். இலக்கண அறிவோடு, பாடப்பகுதியில் உள்ள முழுமையான இலக்கிய, உரைநடைச் செய்திகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆங்கிலப் பாடத்திற்கு அடிப்படை இலக்கணம் அவசியம். 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள சமச்சீர் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களின் பயிற்சிகளை முறையாக ‘ஒர்க் அவுட்’ செய்து பார்த்தால் போதும்.குழந்தை வளர்ப்பு உளவியல் என்பது கொஞ்சம் புதிய பகுதி, இதற்கான பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. ஆனாலும் தேர்வர்கள், தங்களது. D.T.Ed. அல்லது B.Ed படிப்பில் படித்திருப்பீர்கள்.
மனவெழுச்சி, சமூக உணர்வு, ஒப்பார் குழு, அறிவு வளர்ச்சி, உளவியல் முறைகள், தனி ஆள் ஆய்வு, பல்வேறு உளவியல் அறிஞர்களின் கொள்கைகள், வளர்ச்சி, முன்னேற்றம், முதிர்ச்சி, சிந்தனை மற்றும் மொழி, கவனித்தல், மன நோய்கள், வழி காட்டுதல் மற்றும் அறிவுரை பகர்தல், மீத்திறக் குழந்தைகள், கற்றல் கோட்பாடுகள் ஆகியவை இந்தக் குழந்தை வளர்ப்பு உளவியலில் அடங்கியிருக்கும்.
முதல் தாளுக்கான சூழ்நிலையியல் பாடத்திற்கு அரசு வெளியிட்ட (பழைய) சூழ்நிலையியில் பாடங்களைப் படிக்க வேண்டும்.அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடத்திற்கு ஆறு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள சமூக அறிவியல், அறிவியல், கணிதப் பாடங்களை முழுமையாகப் படித்துக்கொள்ள வேண்டும்.பாடங்களைப் படிக்கும்போது, ஒவ்வொரு பாடத்திற்கும் பின்னால் உள்ள பயிற்சி வினாக்களை மட்டும் படிக்காமல், பாடம் முழுவதையும் புரிந்து கொண்டு படிக்க வேண்டும்.குறிக்கோளோடு படியுங்கள். உற்சாகத்தோடு தேர்வுக்குத் தயாராகுங்கள்!
வாழ்த்துகள்!
நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி
எஸ்.வடிவேல் M.A., M.S.(IT)




6 Comments:

  1. இப்பொழுது படித்து பட்டம் பெற்றவர்களுக்கு மட்டும் தான் வாய்ப்பு. மீதி அனைவருக்கும் 130 மதிப்பெண் TET தேர்வில் மதிப்பெண் பெற்றாலும் weightageல் tet 90 marks எடுத்தவர்கள் முந்திவிடவார்கள். இதுதான் காலத்தின் கொடுமை. example english tet-2013 marks 102 அரசு வேலை கிடையாது marks fail 87 marks ஆங்கில ஆசிரியர் வேலை இது உண்மை

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. இரண்டாம் தாளில் பாராபட்சம் உள்ளது. கலை பட்டப் படிப்பிற்கு சமூக அறிவியல் பாடத்தில் மட்டும் 60 மதிப்பெண்கள் என்பது எளிது. ஆனால் அறிவியல் கணிதப் பிரிவினர் Maths, Physics, Chemistry, Botany, Ziology என அனைத்தும் படிப்பது கடினம். ஏற்கனவே நடந்த தேர்வுகளில் 80% வரை கலைப்பிரிவினர் (B.A B.Ed) தான் வேலை பெற்றுள்ளனர் என்பதை பார்க்கும் போது இது தெளிவாகிறது. இதுவரை TETல் வேலை பெற்றவர்களின் 100 பேர் பட்டியல் அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் பெற்று, மற்றும் உங்கள் நண்பர்களில் ஆசிரியர் பணி பெற்றவர் என 100 பேர் பட்டியல் எழுதுங்கள். இதில் 80% வரை B.A ஆசிரியர்கள் தான் உள்ளனர்.

    எனவே தான் 2ல் மாற்றம் தேவை.'

    ReplyDelete
  4. தவறு பேப்பர் 2 நீங்கள் எழுதலாம்

    ReplyDelete
  5. நீங்கள் பேப்பர் டு எழுதலாம்

    ReplyDelete
  6. ஐயா தமிழ் பண்டிட் பயிற்சி முடித்தவர்கள் ஆசிரியர் தகுதி எழுத முடியவில்லை தெரிந்தவர்கள் பதில் கூறவும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive