Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மூன்று நாட்களில், 2,877 ஆசிரியர்கள் இடம் மாறுதல் !!

தமிழகம் முழுவதும், கவுன்சிலிங் மூலம், மூன்று நாட்களில், 2,877 ஆசிரியர்கள் இடம் மாற்றம் பெற்றுள்ளனர். ஆசிரியர்களுக்கான பொது இட மாறுதல் கவுன்சிலில், மே, 19 முதல் நடந்து வருகிறது. இதில், ஒவ்வொரு பிரிவு ஆசிரியர்களுக்கும், தனித்தனியாக கவுன்சிலிங் மூலம், இட மாறுதல் வழங்கப்படுகிறது.


இதில், 366 பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலிருந்து, முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வுடன், வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

அதேபோல, 1,999 முதுநிலை ஆசிரியர்களும், 38 கணினி பயிற்றுனர்களும், ஏழு வேளாண் பயிற்றுனர்கள், 467 இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் என, மொத்தம், 2,877 பேர் இடம் மாற்றம் பெற்றுள்ளனர். இத்தகவலை, பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.




2 Comments:

  1. மாண்புமிகு கல்வி துறை அமைச்சர் மற்றும் உயர்திரு பள்ளி கல்வி துறை செயலர் உத்தரவால் ஐந்து ஆண்டுகள் கழித்து பள்ளிகள் திறப்பதற்கு முன்பே ஆசிரியர் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.ஆனால் ஒரு சில மாவட்டங்களில் பணி மாறுதல் பெற்றும் பல முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் பெற்ற பள்ளிகளிலிருந்து விடுவிக்க படாமல் உள்ளனர்.இது அவர்களுது குழந்தைகளை பள்ளியில் சேர்பதற்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.இதில் அமைச்சர் மற்றும் கல்வி செயலர் தலையிட்டு ஆவண செய்ய தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

    ReplyDelete
  2. 2013-2014ம் ஆண்டு TET தோ்வில் தோ்ச்சிபெற்று பணிக்காக காத்திருக்கும் ஆசிாியா்களுக்கு TRB இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்ட 1111 பட்டதாாி ஆசிாியா்கள் பணி நியமனம் விரைவில் வழங்குமாறு மாண்புமிகு கல்வி துறை அமைச்சா் அவா்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive