Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மொபைல்களைத் தாக்கும் ஜூடி வைரஸ்... அந்த 41 ஆப்களில் ஒன்று உங்கள் மொபைலில் இருக்கிறதா?

இது வைரஸ்களின் காலம் போல் இருக்கிறது.  விண்டோஸ் கணினிகளை ரான்சம்வேர் வைரஸ் ஒரு வழி ஆக்கிவிட்டு போய் கொஞ்ச நாள் கூட ஆகவில்லை. அதற்குள் அடுத்ததாக ஆண்ட்ராய்டில் தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது "ஜூடி" என்னும் வைரஸ்..


ஆண்ட்ராய்டு இயங்குதளங்களைப் பயன்படுத்தும் 8.5 மில்லியன் முதல் 36.5 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் ஜூடி வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது

என்ன செய்யும் ஜூடி?

ஸ்மார்ட்போன்களில் ஜூடி வைரஸ் தாக்கியவுடன் தானாகவே போலியான இணையதள முகவரியை உருவாக்கம் செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தப் போலியான லிங்குகள் மூலம் குறிப்பிட்ட விளம்பர இணையதளங்களின் சர்வர்களுக்குச் செல்லும். இதன் மூலமாக அந்த இணையதளத்தின் வருவாய் அதிகரிக்கும். ஆனால் ரான்சம்வேர் வைரஸ் போல நம்மிடமிருந்து நேரடியாகப் பணத்தைப் பறிக்காது. நமது தகவல்களைத் திருடாது என்பது தற்போதைக்கு நல்ல செய்தி..

எப்படிப் பரவுகிறது?

கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட குறிப்பிட்ட ஆப்ஸ் மூலமாக ஜீடி வைரஸ் ஸ்மார்ட்போன்களைப் பாதித்திருக்கிறது. கொரியாவை ENISTUDIO corp என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள 41 ஆப்ஸ்கள் மூலமாக இந்த வைரஸ் தாக்குதல் நடந்திருக்கலாம் எனக் கண்டறிந்திருக்கின்றனர். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஜீடி வைரஸ் குறிப்பிட்ட ஆப்களில் மறைந்திருந்தாலும் அதைக் கண்டறிய முடியவில்லை. செக் பாய்ன்ட் எனப்படும் பாதுகாப்பு நிறுவனம் செய்த ஆய்வில் அதன் பாதிப்புகள் தற்பொழுது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஜீடி வைரஸ் பாதிக்கப்பட்ட பெரும்பாலான ஆப்ஸ்கள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டு விட்டன.

ஜீடி வைரஸ் பாதிக்கப்பட்ட ஆப்ஸ்கள்

Fashion Judy: Wedding day

Fashion Judy: Waitress style

Chef Judy: Character Lunch

Chef Judy: Picnic Lunch Maker

Animal Judy: Rudolph care

Judy’s Hospital: Pediatrics

Fashion Judy: Country style

Animal Judy: Feral Cat care

Fashion Judy: Twice Style

Fashion Judy: Myth Style

Animal Judy: Fennec Fox care

Animal Judy: Dog care

Fashion Judy: Couple Style

Animal Judy: Cat care

Fashion Judy: Halloween style

Fashion Judy: EXO Style

Chef Judy: Dalgona Maker

Chef Judy: ServiceStation Food

Judy’s Spa Salon

Chef Judy: Hotdog Maker – Cook

Chef Judy: Birthday Food Maker

Fashion Judy: Snow Queen style

Animal Judy: Persian cat care

Fashion Judy: Pretty rapper

Fashion Judy: Teacher style

Animal Judy: Dragon care

Chef Judy: Halloween Cookies

Fashion Judy: Wedding Party

Animal Judy: Teddy Bear care

Fashion Judy: Bunny Girl Style

Fashion Judy: Frozen Princess

Chef Judy: Triangular Kimbap

Chef Judy: Udong Maker – Cook

Fashion Judy: Uniform style

Animal Judy: Rabbit care

Fashion Judy: Vampire style

Animal Judy: Nine-Tailed Fox

Chef Judy: Jelly Maker – Cook

Chef Judy: Chicken Maker

Animal Judy: Sea otter care

Animal Judy: Elephant care

Judy’s Happy House

உங்கள் மொபைல் ஜீடி வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது இனிமேல் பாதிக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

வைரஸ் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது இனிமேல் பாதிக்காமல் இருக்கவோ செய்ய வேண்டியது. குறிப்பிட்ட 41 ஆப்ஸ்கள் இருந்தால் உடனே அன்இன்ஸ்டால் செய்து விடவும்

ஸ்மார்ட்போனின் பாதுகாப்பை அதிகரிக்க உடனடியாகச் சிறந்த  ஆன்டிவைரஸ் ஒன்றை நிறுவுவது நல்லது. இதன் மூலம் வைரஸை நீக்கலாம். மேலும் வைரஸ் புதிதாகப் பாதிக்கப்படாமலும் தடுக்க முடியும்.

பாதுகாப்பற்ற இணையதளங்களிலிருந்து பைல்களை டவுன்லோட் செய்வதைத் தவிர்க்கவும்.

ஸ்மார்ட்போனை எப்பொழுதும் சாப்ட்வேர் அப்டேட் செய்யவேண்டியது அவசியம். இதன்  மூலமாக பெரும்பாலான வைரஸ் தாக்குதலை தடுக்கலாம்.

இணையதளங்களை VPN  மூலமாக பாதுகாப்பாகப் பார்வையிடலாம்.

apk பைல்கள் மூலமாக ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

தேவையற்ற லின்க்குகளை கிளிக் செய்வதைத் தவிர்க்கலாம் மேலும் தேவையற்ற ஆப்ஸ்களை நீக்கி விடவும் ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்வதற்கு முன்பாக அந்த ஆப் நமது ஸ்மார்ட்போனில் எதையெல்லாம் ஆக்சஸ் செய்வதற்கு அனுமதி கேட்கிறது என்பதைப் பார்த்துவிட்டு இன்ஸ்டால் செய்யலாம்.
 
Thanks to Vikatan.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive