Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணிகளில் 4% இடஒதுக்கீடு - முதல்வர் பழனிசாமி உத்தரவு

       அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு செய்து முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் வேலை வாய்ப்பு சட்டம் - 2016-ன் படி  மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசுப்பணிகளில் 4 சதவீத இட ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இந்த உத்தரவானது தமிழக அரசுப் பணிகளுக்கு மட்டுமின்றி பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசின் நிதி உதவிபெறும் அமைப்புகள் என அனைத்திற்கும் பொருந்தும்.இந்த 4% இட ஒதுக்கீட்டில் 1% பார்வைத் திறன் குறைபாடு உடையவர்களுக்கும், 1% செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கும், 1% கை மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மீதமுள்ள 1% அறிவுசார் குறைபாடு உடையவர்களுக்கும் வழங்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து தற்பொழுது மாநில அரசும் அறிவிப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive