Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Night Time - Hormones - இரவு தூக்கத்தில் மட்டுமே சுரக்கும் ஹார்மோன்



        மனித இனம் தோன்றிய காலம் முதல் தற்போது வரை மனிதர்கள் இயற்கையை சார்ந்து தான் உயிர் வாழ முடியும். மூச்சுக்காற்று, தண்ணீர், வெப்பம் உணவு உள்பட அனைத்தும் இயற்கையில் இருந்து தான் நமக்கு கிடைக்கின்றன. ஆனால் நாகரிகமும், தொழில்நுட்பமும் வளர்ச்சி அடைந்ததும், மனிதர்களாகிய நாம் இயற்கையை எதிர்த்து வாழ முயற்சி செய்து வருகிறோம். மின்சாரம் என்ற ஒன்று மனிதனுக்கு தெரியாத வரை மனிதர்கள் இரவு 7, 8 மணிக்கெல்லாம் தூங்கச் சென்றுவிட்டனர்.

          ஆனால், மின்சாரமும், அதன் பயன்பாடும் தெரிய வந்ததை தொடர்ந்து, அதனை பயன்படுத்தி இரவுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து காலை 9 மணிக்கு எழுந்தால் தூங்கும் நேரத்தை சமன் செய்து விடலாம் என தவறாக எண்ணி வருகின்றனர்.

        நமது உடலமைப்பின்படி, இரவு 11 மணிக்கு முன்னதாக நிச்சயம் தூங்கிவிட வேண்டும். ஏனெனில், சூரியன் உதிக்கும்போது உள்ள வெப்பத்தில், நமது உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கும். அதேபோல் இரவு நேரத்தில் சில ஹார்மோன்கள் நமது உடலில் சுரக்கும். இது மனிதன் வளர்ச்சி அடைந்த சுமார் 40 லட்சம் ஆண்டுகளாக நமது உடலில் நடைபெற்று வரும் இயற்கையான சுழற்சி ஆகும். முக்கியமாக, மெலோட்டலின் என்கிற ஹார்மோன் இரவில் தூங்கும்போது மட்டும், அதுவும் அறையில் வெளிச்சம் இல்லாமல் தூங்கும்போது மட்டுமே சுரக்கும்.

         இந்த மெலோட்டலின் ஹார்மோனை, செயற்கையாக எந்த மாத்திரை சாப்பிட்டும் சுரக்க வைக்க முடியாது. தற்போது இரவு நேரத்தில் பணிபுரிபவர்கள், இரவில் நீண்ட நேரம் சமூக வலைத்தளங்களை பார்ப்பவர்கள், தூங்காமல் தொலைக்காட்சி அல்லது புத்தகம் படிப்பவர்களுக்கு இந்த ஹார்மோன் சுரக்காது.

           இந்த மெலோட்டலின் ஹார்மோன் சுரக்காமல் இருப்பதால் உண்டாகும் பாதிப்பு இளம்வயதினருக்கு உடனடியாக தெரிந்து விடாது. ஆனால், உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு 27 முதல் 30 வயதிற்குள் தான் உடல் உபாதைகள் தொடங்கும். முதலில் செரிமானக் கோளாறு, வாயுத் தொல்லை என தொடங்கி 35 வயதிற்கு பிறகு இது முற்றிய நிலையில் 40 வயதிற்கு மேல் புற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது. எனவே இரவு தூக்கம் மிக மிக முக்கியமானதாகும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive