டோர் டெலிவரி திட்டத்திற்கு அனுமதி : டெல்லியில் இனி வீடு தேடி 40 அரசு பொது சேவைகள்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் டோர் டெலிவரி திட்டத்திற்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் திடீரென ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனை தமது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசின் முக்கிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது ஒட்டு மொத்த டெல்லிவாசிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இத்திட்டத்தின் படி பயோமெட்ரிக் மறையில் அடையாளத்தை உறுதி செய்த பின் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே நேரடியாக சென்று விநியோகிக்கப்படும்.

மேலும் திருமண பதிவு, சாதி சான்றிதழ் உள்ளிட்ட அரசு ஆவணங்களை பெற பயனாளிகள் அரசு அலுவலகங்களுக்கு அலையத் தேவையில்லை. இத்திட்டத்தின் கீழ் சுமார் 40 பொது சேவைகளை வழங்கிட அரசு திட்டமிட்டுள்ளது. முன்னதாக கெஜ்ரிவாலின் இந்த டோர் டெலிவரி திட்டத்திற்கு கடந்த நவம்பரில் நடந்த அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது. டிசம்பரில் இதற்கான அறிவிப்புவெளியாகி, அரசாணை கோப்புகள் துணை நிலை ஆளுநரிடம் சென்றன. ஆனால் அவர் அப்போது இத்திட்டத்தை நிராகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

Share this