உயிரியலில் புரிந்து எழுதினால் 'சென்டம்' : பிளஸ் 2 ஆசிரியர், மாணவர்கள் கருத்து

 'புரிந்து எழுதினால் பிளஸ் 2 உயிரியல் பாடத்தில் 'சென்டம்' பெறுவது எளிது,' என ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.-வில்சன்பிரபாகர், ஆசிரியர், வைத்தியலிங்க நாடார் மேல்நிலை பள்ளி, திருச்சுழி:- - - -சிந்தித்து எழுதுவது விதமாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. பல கேள்விகள் எளிது. தாவரவியல் நன்கு படித்து இருந்தால் அதிக மதிப்பெண் பெறலாம். நீட் தேர்வை கருத்தில் கொண்டு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. சராசரி மாணவர்கள் கூட வெற்றி பெறுவர்.
பூஜா ஸ்ரீ, மாணவி, கே.வி.எஸ். பெண்கள் மேல்நிலை பள்ளி, விருதுநகர்: மனப்பாடம் செய்வதை விட்டு, பாடங்களை புரிந்து படித்ததால் தேர்வு எளிமையாக இருந்தது. விலங்கியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் கேள்விக்கு யோசித்து விடையளித்தேன். ஆறாம்பாடத்தை கவனமாக படித்திருந்தால், மதிப்பெண் அதிகம் பெறலாம்.பி.கிஷோர், மாணவர், ஜே.சீ.எஸ்., மெட்ரிக் பள்ளி, சிவகாசி: விலங்கியல் பிரிவில் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தன. தாவரவியல் பிரிவு கேள்விகள் அனைத்தும் சுலபம். ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தன. பாடத்தின் உள்ளே இருந்து கேள்விகள் ஆழமாக கேட்கப்பட்டிருந்தன. இதன் மூலம் நீட் தேர்வில் எளிதாக பதில் அளிக்க முடியும்.

Share this

0 Comment to " உயிரியலில் புரிந்து எழுதினால் 'சென்டம்' : பிளஸ் 2 ஆசிரியர், மாணவர்கள் கருத்து"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...