முகத்தை பராமரிப்பது எப்படி?
இன்று ஒரு நாள்தான் வீட்டில் இருக்க நேரம் கிடைத்தது என்று சிலரும், எப்பொழுதும் வீட்டிலேயேதான் இருக்கிறேன் என பலரும் கவனம் கொள்வது அழகு விஷயத்தில். ஏனோ தெரியவில்லை, ஞாயிற்றுக்கிழமை என்றாலே ஸ்பெஷலான வேலைகளும் கூடவே வந்துவிடும். சுவையாகச் சமைத்தாலும் துணிகளை மொத்தமாகத் துவைத்தாலும் முக அழகிற்காக ஒதுக்கப்படும் நேரமோ இன்று அதிகம். கறுப்பாக இருக்கிறோமே என்று கவலை கொள்ளும் பெண்கள் தற்போதுதான் அது ஆரோக்கியமானது என்றும் முதுமையும் சருமப் பிரச்சினைகளும் அவ்வளவு எளிதில் வராது என்றும் உணரத் தொடங்கியுள்ளனர். சரி ஓரிரு பேஷியல்களையும் முக்கியமான சில டிப்ஸ்களையும் இன்று பார்ப்போம்.

பழ பேஷியல்

காய்ச்சாத பாலால் முகத்தை முதலில் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரிச் சாறு அல்லது ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து சில நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து, அதில் பஞ்சை நனைத்து முகத்தில் ஒற்றியெடுக்கவும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக்கொள்ளவும்.

அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக்கொள்ளவும். கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும்.

காய்கறி பேஷியல்

முதலில் சொன்ன மாதிரி பச்சைப் பாலால் முகத்தைத் துடைக்கவும். முட்டைக் கோஸை பச்சையாக மசித்து வைத்துக் கொள்ளவும். இது தவிர அதில் கொஞ்சம் சாறும் எடுத்து வைத்துக்கொள்ளவும். முட்டைக் கோஸ் மசித்ததைக் கொண்டு முகத்துக்கு மசாஜ் கொடுக்கவும். இடையிடையே முட்டைக்கோஸ் சாறை விரல்களில் தொட்டுக் கொள்ளவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தைத் துடைத்து விட்டு, முட்டைக்கோஸ் விழுது, பால் மற்றும் தேன் கலந்த பேக் போடவும்.

மேற்சொன்ன இரண்டு பேஷியல்களையும் பதினைந்து நாட்கள் இடைவெளியில் செய்துகொள்ளலாம். பருக்கள் இல்லாதவர்கள் என்றால் பத்து நாட்களுக்கொரு முறையும் செய்துகொள்ளலாம்.

கறுப்பாக இருப்பவர்களின் சருமம் மஞ்சள், பிரவுன் அல்லது பிங்க் என எந்த மாதிரியான ஸ்கின் டோன் கொண்டது எனப் பார்த்து அதற்கேற்ற பவுண்டேஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பவுண்டேஷனை மணிக்கட்டில் தடவிப் பார்த்து அது சரியாகப் பொருந்துகிறதா எனத் தெரிந்து உபயோகிக்கலாம்.

உடை அணிகிற விஷயத்தில் பளீர் நிற உடைகள் அப்படியே முகத்தில் பிரதிபலிக்கும். அதே சமயம் டார்க் நிற உடைகளும் அப்படியே உடலின் நிறத்தோடு ஒன்றிப் போய் இன்னும் கருப்பாகக் காட்டும். வெள்ளை மற்றும் ரொம்பவும் வெளிர் நிறங்களைத் தவிர்த்து கிரீம், டார்க் பிங்க், ஆரஞ்சு, நீலம், பச்சை, மெஜந்தா பிங்க் போன்ற நிறங்களில் உடை அணியலாம்.

லிப்ஸ்டிக், ஐ ஷேடோ போன்றவை ரொம்பவும் டார்க் நிறமாகவும் இல்லாமல், ரொம்பவும் வெளிர் நிறமாகவும் இல்லாமல் மீடியம் ஷேடில் இருக்கட்டும். லிப்ஸ்டிக் போடுகிற நிறத்திலேயே ஐ ஷேடோவும் இருக்கட்டும்.கருப்பான பெண்கள் வெள்ளை நிறப்பவுடர் உபயோகிப்பதைத் தவிர்த்து, லூஸ் பவுடர் உபயோகிக்கலாம்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive