சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை: அவசர வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல் வெளியீடு

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், அவசர வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் பெயர் பட்டியலை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஆர்.சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கைகையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை (ஏப் 30) முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அவசர வழக்குகளை விசாரணை நடத்த நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 29 முதல் மே 6-ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்படும் அவசர வழக்குகளை நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சேஷசாயி, ஜி.ஜெயச்சந்திரன், எஸ்.ராமதிலகம், ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் விசாரணை நடத்துவார்கள்.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்படும் அவசர வழக்குகளை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஏ.எம்.பஷீர் அகமது, ஆர்.தாரணி ஆகியோர் விசாரணை நடத்துவார்கள்.
மே 7 முதல் 13-ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்படும் அவசர வழக்குகளை நீதிபதிகள் வி.பார்த்திபன், பி.டி.ஆதி கேசவலு, எஸ்.எம்.சுப்பிரமணியம், எஸ்.ராமதிலகம், ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் விசாரணை நடத்துவார்கள்.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்படும் அவசர வழக்குகளை நீதிபதிகள் எம்.கோவிந்தராஜ், ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.தாரணி, ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் விசாரணை நடத்துவார்கள்.

மே 14 முதல் 20-ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்படும் அவசர வழக்குகளை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எம்.தண்டபாணி, சி.வி. கார்த்திகேயன், பி.ராஜமாணிக்கம், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரணை நடத்துவார்கள்.
மதுரை கிளையில் தொடரப்படும் அவசர வழக்குகளை நீதிபதிகள் எம்.சுந்தர், அனிதா சுமந்த், எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் விசாரணை நடத்துவார்கள்.
மே 21 முதல் 27-ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்படும் அவசர வழக்குகளை நீதிபதிகள் டி.ரவீந்திரன், பி.வேல்முருகன், வி.பவானி சுப்பராயன், பி.ராஜமாணிக்கம், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரணை நடத்துவார்கள்.
மதுரை கிளையில் தொடரப்படும் அவசர வழக்குகளை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.சுரேஷ்குமார், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் விசாரணை நடத்துவார்கள்.
மே 28 முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்படும் அவசர வழக்குகளை நீதிபதிகள் எஸ்.பாஸ்கரன், அப்துல் குத்தூஸ், ஆர்.எம்.டி. டீக்காராமன், என்.சதீஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் விசாரணை நடத்துவார்கள்.
மதுரை கிளையில் தொடரப்படும் அவசர வழக்குகளை நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், ஜெ.நிஷாபானு, வி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive