பத்தாம் வகுப்பு அறிவியல் பாடம்... செய்ய வேண்டிய, செய்யக்கூடாத விஷயங்கள்..

மருத்துவம் படிக்க வேண்டும்; பொறியியல் படிக்க வேண்டும் என்றுஆசைப்படும் மாணவர்கள், சென்டம் ஸ்கோருடன் தாண்டவேண்டிய முதல் படி, பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு.1. ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு சாய்ஸ் கிடையாது என்பதால், எல்லாப் பாடங்களின் புக் பேக் ஒரு மதிப்பெண் கேள்விகளுடன், பாடங்களின் உள்ளே இருக்கும் ஒன் வேர்டுகளையும் படியுங்கள்.


2. இரண்டு மதிப்பெண் கேள்விகள் 32 கொடுத்து, இருபதுக்கு மட்டும்தான் பதில் கேட்பார்கள். ஸோ, தெரியாத கேள்விகளை ஸ்கிப் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.


3. 5 மதிப்பெண் வினாக்களைப் பொறுத்தவரை, ஜோடி ஜோடியாக, அதாவது 2 மற்றும் 3-ம் பாடங்களிலிருந்து தலா ஒன்றும், 4 மற்றும் 7-ம் பாடங்களிலிருந்து தலா ஒன்றும், 10 மற்றும் 13-ம் பாடங்களிலிருந்து தலா ஒன்றும், 15 மற்றும் 17-ம் பாடங்களிலிருந்து தலா ஒன்றும் கேட்கப்படும். அதனால், 2, 4, 10, 15 ஆகிய பாடங்களிலிருந்தோ அல்லது 3, 7, 13, 17 ஆகிய பாடங்களிலிருந்தோ ஏதேனும் நான்குப் பாடங்களின் புக் பேக் கேள்விகளோடு, பாடங்களுக்குள்ளே இருக்கும் 5 மதிப்பெண் கேள்விகளையும் நன்குப் படியுங்க.


4. கணக்குகள் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு விடை எழுதும்போது, அதற்கான அலகு போட மறந்துவிடாதீர்கள். மறந்தால், மதிப்பெண் குறைந்துவிடும்.


5. சரியா, தவறா? தவறாக இருந்தால் திருத்தி எழுதுக, அல்லது காரணம் கூறு என்று கேட்கப்படுகிற வினாக்களுக்கு, விடை எழுதும்போது சரி/ தவறு என்று குறிப்பிட்டுவிட்டே, கேள்விக்கான பதிலை எழுதவும்.


6. பெரிய கேள்விகளில், உப கேள்விகளாக அ அல்லது ஆ, i அல்லது ii என்று கேட்டிருந்தால், கேள்விகளுக்கான நம்பரை போட்டுவிட்டு, பதில் எழுதுங்கள். கேள்விக்கான நம்பரை போடாமல் இருப்பதோ, அல்லது தவறாகப் போடுவதோ உங்கள் மதிப்பெண் குறைய காரணமாகிவிடும்.


7. பத்தாம் வகுப்பு மாணவர்கள் முதல்முறையாக பொதுத் தேர்வு எழுதுவதால், இன்னொரு தவறையும் செய்து, நேரத்தையும் மதிப்பெண்ணையும் வீணடிக்கிறார்கள். அதாவது, கேள்வி 'அ' அல்லது 'ஆ', 'இ' அல்லது 'ஈ' என எழுத வேண்டும் என்கிற பகுதியில் அவர்களுக்கு 'அ' மற்றும் 'ஆ' தெரிந்திருக்கும். 'இ' மற்றும் 'ஈ' தெரிந்திருக்காது. உடனே, மாணவர்கள் 'அ' மற்றும் 'ஆ'வை எழுதிவிடுகிறார்கள். இதில், ஒரு கேள்விக்கு மட்டும்தான் மதிப்பெண் கிடைக்கும்.


8. ஒரு படத்தை வரையச்சொல்லி, அதன் பாகங்கள் இரண்டைக் குறி என்று கேட்டால், மூன்று, நான்கு பாகங்கள்கூட குறிக்கலாம் தவறில்லை. அதேபோல, ஒரு தனிமத்தின் பயன்கள் இரண்டினைக் கூறு என்கிற கேள்விக்கும் மூன்று, நான்கு பயன்களைக் கூறலாம்.


9. ஒரு மதிப்பெண் கேள்விகளில் வரும் 'பொருத்துக' பகுதிக்கு, வெறுமனே பதிலை மட்டும் எழுதாமல், இரு பக்கத்தையும் சேர்த்தே எழுதுங்கள்.


10. பாடங்களின் உள்ளே வருகிற அறிந்துகொள்வோம், செயல், அறிஞர்களின் குறிப்புகள், சிந்திக்க படிக்க பின்னர் அறிக போன்ற பகுதிகளைக் கட்டாயம் படியுங்கள்.


11. எல்லாப் பாடங்களிலும் உள்ள கணக்குகள், அட்டவணைகள், வேறுபாடுகள், பயன்கள், சிறப்பியல்புகள். விதிகள் மற்றும் வகைகளை நன்றாகப் படித்துவிடுங்கள், சிநறு வினாக்களில் ஆரம்பித்து, பெருவினாக்கள் வரை இவை உதவியாக இருக்கும்.

அன்புடன்
சு.முருகன்
சுப்பிரமணிய சாஸ்திரியார் மேனிலை பள்ளி
ஆரணி

Share this

1 Response to " பத்தாம் வகுப்பு அறிவியல் பாடம்... செய்ய வேண்டிய, செய்யக்கூடாத விஷயங்கள்.."

Dear Reader,

Enter Your Comments Here...