ஒரே பள்ளி ஆசிரியர்கள் இருவருக்கு விருதுகள்

மதுராந்தகம்:மதுராந்தகம்
அரசு பள்ளி ஆசிரியர்கள் இருவர், நல்லாசிரியர் மற்றும் செம்மல் விருது பெற்றது, கல்வியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.மதுராந்தகம், இந்து அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் இருவருக்கு, மாநில அளவிலான விருது கிடைத்திருப்பது,
மாணவர்கள், கல்வியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கட பெருமாள், தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் வழங்கும், ஆசிரியர் செம்மல் விருதை பெற்றுள்ளார்.அதே போல், இப்பள்ளியின் இடைநிலை ஆசிரியர் உமாபதி என்பவரும், மாநில நல்லாசிரியர் விருதை பெற்றுள்ளார்.

Share this