இந்திய வாட்ஸ் ஆப் குறைகேட்பு அதிகாரியாக கோமல் லஹிரி நியமனம்

இந்தியாவுக்கான வாட்ஸ் ஆப் குறைகேட்பு அதிகாரியாக கோமல் லஹிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வாட்ஸ் ஆப் மூலம் பரவிய குழந்தை கடத்தல் வதந்தி காரணமாக சிலர் அடித்து கொல்லப்பட்டனர். இதனால், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இது குறித்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்தியாவுக்கான குறை கேட்பு அதிகாரியை நியமிக்க வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து யாக கோமல் லஹிரி என்பவரை இந்திய குறைகேட்பு அதிகாரியாக வாட்ஸ் ஆப் நிறுவனம் நியமித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த இவர் வாட்ஸ் ஆப் நிறுவன மூத்த இயக்குநர்களில் ஒருவர். குறைகள், புகார்கள் குறித்து இ மெயில், வாட்ஸ் ஆப் மூலமோ இவரிடம தெரிவிக்கலாம்.

Share this

0 Comment to "இந்திய வாட்ஸ் ஆப் குறைகேட்பு அதிகாரியாக கோமல் லஹிரி நியமனம்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...