விருதுநகா அருகே குப்பாம்பட்டி கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏசி வசதியுடன் ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கப்பட்டுள்ளது.
குப்பாம்பட்டியில் 1835-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, 2009-ல் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் 130 மாணவாகள் பயின்று வரு கின்றனா.
மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிப்பதற்காக 1 முதல் 5-ம் வகுப்பு வரை தொடுதிரை வசதியுடன் கூடிய உயர் தொழில்நுட்ப வகுப்பறை ஆசிரியர், பொதுமக்கள் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. இதற்காக இப்பள்ளிக்கு கடந்த ஜூலை மாதம் தமிழக அரசின் புதுமைப் பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு குளிர் சாதன வசதியுடன் கூடிய உயர் தொழில்நுட்ப வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வசதி புதுமைப் பள்ளி விருதுக்கான தொகை ரூ.1 லட்சத்துடன் சேர்த்து ஆசிரி யர் கள்-பொதுமக்கள் பங் களிப்புடன் ரூ.1.70 லட்சத்தில் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்குப் பாடம் தொடர்பான கூடுதல் செய்திகளை எளிதாக உடனுக்குடன் கற்பிக்க ஏதுவாக வகுப்பறையில் 2 எல்.இ.டி. டிவிகளும் சுத்திகரிக் கப்பட்ட குடிநீர் வசதியும் செய்யப் பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கல்வி தொடாபான ஆப் மூலம் மாணவர்கள் விளையாட்டு முறை யிலும், விருப்பத்துடனும் மிகவும் எளிதாக கல்வி கற்கின்றனர்.
தமிழக அரசால் வழங்கப் பட்டுள்ள 'தாய் எனப்படும் தமிழ்' குறுந்தகட்டின் மூலம் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரைப் பயி லும் மாணவாகள் அதிகமான தமிழ்ப் பாடங்களை எளிதாகக் கற்க முடிகிறது. இந்த ஸ்மார்ட் வகுப்பறையை மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் திறந்துவைத்து மாணவர்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார்.
விருதுநகர் மாவட்டத்திலேயே முதன்முதலாக குளிர்ச்சாதன வசதி செய்யப்பட்ட தொடுதிரை வகுப்பறை மூலம் புதுமையான, இனிமையான கற்றல், கற்பித்தல் மாணவர்களுக்கு அளிக்கப்படுவது இந்தப் பள்ளியில்தான் என ஆசிரியர்கள் கூறினர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...