திருவண்ணாமலையை அடுத்த சாவல்பூண்டி
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்
பள்ளியில், பிரதமருக்கு தூய்மை நிகழ்வுகள் குறித்து கடிதம் அனுப்பும்
போட்டி நேற்று நடைபெற்றது
திருவண்ணாமலை வட்டாரக் கல்வி அலுவலர் ஷகிலா தலைமை வகித்து, போட்டிகளைத் தொடக்கி வைத்தார்
பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மதனா முன்னிலை வகித்தார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் சரவணன் வரவேற்றார். பள்ளி மாணவ, மாணவிகள் பலர்
பிரதமருக்கு கடிதம் எழுதி அனுப்பினர்
இதைத் தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்களுக்கு
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து
துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், பள்ளி
ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து
கொண்டனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...