சென்னை
தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் சென்னை யில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வு உள்ளது என்று வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். செவிலியர் கல்வி முறையில் முன்னேற்றங்களைக் கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசின் தரப்பிலிருந்து கருத்துகள் கேட்கப்பட்டிருந்தன. கேட்கப்பட்ட சில அம்சங்களில் ஒன்றில் 2022-ம் ஆண்டில் செவிலியர் கல்வி முறையில் நீட் தேர்வைக் கொண்டு வரலாமா, அதில் மாநில அரசுகளின் கருத்து என்ன என்று கேட்கப்பட்டிருந்தது. தமிழகத்தை பொறுத்தவரை மருத் துவம், பல் மருத்துவம் மற்றும் மேற்படிப்புகளில் கொள்கை ரீதியாக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், செவிலியர் படிப்புக்கும் நீட் தேர்வை தமிழக அரசு எதிர்த்து பதில் அளித்துள்ளது.
இந்திய நர்சிங் கவுன்சில் மூலமாக வந்த கடிதத்துக்கு மாநில நர்சிங் கவுன்சில் பதில் அளித்துள்ளது. அதனால் தேவை யற்ற பீதி வேண்டாம். ஆயுஷ் படிப்புக்கும் பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும் என்று பதில் அளித் துள்ளோம். மேலும் ஆரம்ப சுகா தார நிலையங்களை தனியார் மய மாக்குவது குறித்த கேள்விக்கும், தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களை மாநில அரசே நடத்தும் என்று திட்டவட்டமாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...