போராட்டம் செய்தால் சம்பளம் ‘கட்’!
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (செப்டம்பர்
19) நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளதாக மத்திய அரசு
ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அரசு ஊழியர்கள் யாராவது போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என மத்தியத் தொழிலாளர் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு நேற்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில் தெரிவித்திருப்பதாவது:
“அரசு ஊழியர்கள் எந்தவிதத்திலும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. ஊழியர்கள் மொத்தமாக விடுப்பு எடுப்பது உள்ளிட்டவைகளும் நடத்தை விதிகள் 1964இன் பிரிவு 7ஆவது விதிமீறலாகக் கருதப்படும். அதிகாரிகள் யாரும் தங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களுக்கு எந்தவிதமான விடுமுறையும் அளிக்க வேண்டாம். தேர்தல் சமயத்தில் விடுமுறை எடுத்தாலோ, போராட்டத்தில் ஈடுபட்டாலோ சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.”
என்று அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...