ஜியோமி நிறுவனம் தனது அடுத்த டாப் படைப்பாக வெளியிடவுள்ள Mi Mix 3 ஸ்மார்ட்போனில், 10 ஜிபி ரேம் மற்றும் 5ஜி சேவைக்கான தொழில்நுட்பம் ஆகியவை இருக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் நவீன ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் சீன நிறுவனம் ரெட்மி, குறுகிய காலத்திலேயே, சர்வதேச மார்க்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டது. முன்னதாக Mi Mix 2 மொபைலின் முகப்பில் 90 சதவீதத்திற்கும் மேல் டிஸ்பிளே வருமாறு வாடிக்கையாளர்களை கவர்ந்தது. ஐபோன் எக்ஸ்-க்கு பிறகு, 'நாட்ச்' எனப்படும் இடைவெளியை மொபைலின் மேல் பாகத்தில் விட்டு, பல நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருகின்றன.
இது ஒரு தரப்பினரிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும், 'நாட்ச்' இல்லாமல் போன் முழுவதும் டிஸ்பிளே இருக்கும் மொபைல்களுக்கு வரவேற்பு கூடிக்கொண்டே போகிறது. இதனாலேயே விரல் ரேகை சென்சார் போன்றவற்றை, டிஸ்பிளேவிற்கு உள்ளே மறைத்து வைக்க பல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. அதேபோல, முன்பக்க கேமராவை மறைக்கவும் பல்வேறு தொழில்நுட்பங்கள் பின்பற்றப்படுகின்றன. ஓப்போ ஃபைண்ட் எக்ஸ், விவோ நெக்ஸ் போன்ற மொபைல்களில், மறைந்திருக்கும் முன்பக்க கேமரா, செல்பி எடுக்கும்போது மட்டும் மேலே எழுந்து வருவது போன்ற தொழில்நுட்பம் புகுத்தப்பட்டது. அந்த தொழில்நுட்பத்தை அடுத்து ஏற்றுள்ளது ஜியோமி.
தனது புதிய Mi Mix 3 மொபைலில், முன் பக்கம் முழுக்க முழுக்க டிஸ்பிளே உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டுக்கு வரும் உலகின் முதல் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட மொபைல் இதுதான். மேலும், முதன்முறையாக மொபைலில் 10 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது. 10 ஜிபி ரேம் பற்றி பல நிறுவனங்கள் அறிவிப்புகள் வெளியிட்டாலும், இதுவரை எந்த போனிலும் அது வழங்கப்படவில்லை. வரும் 25ம் தேதி Mix 3 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...