NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வரலாற்றில் இன்று - 11.10.2018

வரலாற்றில் இன்று - 11.10.2018


அக்டோபர் 11, கிரிகோரியன் ஆண்டின் 284 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 285 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 81 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1138 – சிரியாவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 200,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1634 – டென்மார்க், மற்றும் ஜெர்மனியில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் 15,000 பேர் கொல்லப்பட்டனர்.
1801 – காளையார் கோயிலைக் கைப்பற்றிய ஆங்கிலேயர் அதனையும் சுற்றியுள்ள காடுகளையும் தீயிட்டுக் கொளுத்தினர்.
1811 – ஜோன் ஸ்டீவன்ஸ் கண்டுபிடித்த ஜூலியானா என்ற முதலாவது நீராவிப் படகுக் கப்பலின் சேவை நியூ யோர்க்கிற்கும் நியூ ஜேர்சிக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்டது.
1852 – ஆஸ்திரேலியாவின் மிகப் பழமையான சிட்னி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1865 – ஜமெய்க்காவில் நூற்றுக்கும் அதிகமான கறுப்பின மக்கள் அரசுக்கெதிரான எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இது அன்றைய பிரித்தானிய அரசால் நசுக்கப்பட்டதில் நானூறுக்கும் அதிகமான கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டனர்.
1899 – இரண்டாவது போவர் போர் தென்னாபிரிக்காவில் ஐக்கிய இராச்சியத்துக்கு எதிராக ஆரம்பமானது.
1941 – மக்கெடோனியாவில் தேசிய விடுதலைப் போர் ஆரம்பமானது.
1944 – துவீனிய மக்கள் குடியரசு சோவியத் ஒன்றியத்துடன் இணைந்தது.
1954 – வட வியட்நாமை வியட் மின் படைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன.
1958 – நாசாவின் முதலாவது விண்கலம் பயனியர் 1 சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இது சந்திரனை அடையாமலே மீண்டும் இரண்டு நாட்களில் பூமியில் வீழ்ந்து எரிந்தது.
1968 – நாசா முதற் தடவையாக மூன்று விண்வேளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தில் விண்ணுக்கு ஏவியது.
1984 – சலேஞ்சர் விண்ணோடத்தில் சென்ற கத்ரின் சலிவன் விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
1987 – விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப் படை பவான் நடவடிக்கை என்ற பெயரில் போரை ஆரம்பித்தனர்.
1998 – கொங்கோவில் வானூர்தி ஒன்று தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
2002 – பின்லாந்தில் கடைத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
2006 – ஈழப்போர்: முகமாலையில் இடம்பெற்ற சமரில் 129 இராணுவத்தினரும் 22 விடுதலைப்புலிகளும் கொல்லப்பட்டனர். 300 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர்.
பிறப்புகள்
1738 – ஆர்தர் பிலிப், நியூ சவுத் வேல்ஸ் முதலாவது ஆளுநர் (இ. 1814)
1758 – ஹென்ரிச் ஒல்பெர்ஸ், செருமானிய மருத்துவர், வானியலாளர் (இ. 1840)
1820 – ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, ஈழத்தின் தமிழறிஞர், தமிழாசிரியர், இதழாசிரியர், புலவர் (இ. 1896)
1826 – மாயூரம் வேதநாயகம்பிள்ளை, தமிழ்ப் புதின முன்னோடி (இ. 1889)
1884 – எலினோர் ரூசுவெல்ட், அமெரிக்க அரசியல்வாதி (இ. 1962)
1896 – உரோமன் யாக்கோபுசன், உருசிய-அமெரிக்க மொழியியலாலர் (இ. 1982)
1902 – ஜெயபிரகாஷ் நாராயண், இந்திய அரசியல்வாதி (இ. 1979)
1930 – கே. பி. உமர், இந்திய நடிகர் (இ. 2001)
1942 – அமிதாப் பச்சன், இந்திய நடிகர்
1947 – லூகாசு பாபடெமோசு, கிரேக்கப் பிரதமர்
1952 – ஐசக் இன்பராஜா, ஈழத்து நாடகக் கலைஞர் (இ. 2014)
1962 – ஆன் என்ரைட், அயர்லாந்து பெண் எழுத்தாளர்
1973 – தகேஷி கனேஷிரோ, சப்பானிய நடிகர், பாடகர்
1977 – மாட் போமேர், அமெரிக்க நடிகர்
இறப்புகள்
1889 – ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல், ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1818)
1896 – ஆன்டன் புரூக்னர், ஆத்திரிய இசையமைப்பாளர் (பி. 1824)
2006 – ஏ. ஜே. கனகரத்னா, ஈழத்தின் பிரபல பத்திரிகையாளர், எழுத்தாளர், (பி. 1934)
*சிறப்பு தினம்
சர்வதேச பெண் குழந்தைகள் தினம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive