வாட்ஸ்அப்பில் விளம்பரம்!

கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ள
வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்-இல் விளம்பரம் காணும் வசதி விரைவில் வரவிருக்கிறது.

விளம்பரங்கள் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற ஒரு சூழல் தற்போது உருவாகியுள்ளது. இதில், சமூக வலைத்தளங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. அந்த வகையில் சமீபத்தில், வாட்ஸ் ஆப்பில் பல்வேறு அப்டேட்கள் அரங்கேறி வருகின்றன. அதில் மிக முக்கியமானதாக வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்-இல் விளம்பரம் காணும் வசதி விரைவில் வரவிருக்கிறது. அதன்படி, நாம் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் பார்க்கும்போது, இடையில் விளம்பரம் தோன்றும். குறிப்பிட்ட நேரத்திற்கு, ஒரு விளம்பரம் லைவ்-இல் இருக்கும்.

இதன்மூலம் தாங்கள் தங்களது தொழில் சார்ந்த விளம்பரங்களை வாட்ஸ்ஆப் மூலமாக பதிவிட்டுக்கொள்ளலாம். இதனால் வர்த்தகத்தில் வாட்ஸ்ஆப் மிகமுக்கியமான அங்கமாக இருக்கும் என கூறப்படுகிறது.

முதலில் ஆண்ட்ராய்டு 2.18.303 பீட்டா வெர்ஷனில், இந்த வசதி வரவுள்ளது. தொடர்ந்து மற்ற வெர்ஷனிலும் கொண்டுவரப்படும் என வாட்ஸ்ஆப் தகவல் தெரிவித்துள்ளது.

Share this

0 Comment to "வாட்ஸ்அப்பில் விளம்பரம்!"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...