⭐அங்கன்வாடிகளில் படிக்கும்
52 ஆயிரம் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
       
⭐தமிழகம் முழுவதும் அங்கன்வாடிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.
⭐இந்த குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியிலான மழலையர் வகுப்புகளில் சேர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
⭐பள்ளிக்கல்வித் துறை நடத்திய ஆய்வில், 52 ஆயிரம் குழந்தைகள் படிக்கக் கூடிய அங்கன்வாடி மையங்கள் அரசு பள்ளிகள் வளாகத்திலேயே இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் கட்டமாக 52 ஆயிரம் குழந்தைகளையும் அரசு பள்ளிகளில் வரும் ஜனவரி மாதம் சேர்ப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
⭐தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சமூகநலத்துறை அமைச்சர் சரோஜாவுடன் நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
⭐இரண்டாவது கட்டமாக மீதமுள்ள குழந்தைகளையும் அரசு பள்ளிகளில் சேர்க்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

1 comment:

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments