NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கேன்சர் வராமல் தவிர்க்க உதவும் உணவுகள்!




உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறையாமல் பார்த்து கொண்டாலே புற்றுநோய் மட்டுமல்ல வேறு எந்த நோயும் ஏற்படாது. அந்த வகையில் புற்றுநோய்க்கு கேடயமாகும் சில உணவுகளை காணலாம். 
க்ரீன் டீ
மட்சா க்ரீன் டீ வகை ஜப்பானின் பாரம்பரிய விழாக்களில் பயன்படுத்தப்படுகின்றன. மட்சாவில் உள்ள கேட்டசின் என்றழைக்கப்படும் பாலிபெனால் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சிறப்பாக செயலாற்ற செய்கிறது. இது புற்றுநோய் கட்டிகளை மேற்கொண்டு வளர விடாமல் தடுக்கிறது.
பெர்ரி
பிளாக் பெர்ரி, ப்ளூபெர்ரி, கிரான்பெர்ரி போன்ற அனைத்து வகை பெர்ரிகளிலும், பிடோநியூட்ரியன்ட்ஸ் மற்றும் எலாஜிக் அமிலம் உள்ளது. இது புற்றுநோய் கட்டிகள் வளர்வதை தடுத்து நிறுத்துகிறது. புற்றுநோய் செல்கள் அதிகரிப்பதையும் தாமதிக்கிறது. பெர்ரி பழங்களை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், நுரையீரல், வயிறு மற்றும் வாய் புற்றுநோய் ஆகியவை ஏற்படும் பாதிப்பை பெரும்பாலும் குறைக்கும்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம்
வாரத்தில் ஒரு முறை எடுத்துக் கொள்ளும் போது, உடலுக்கு தேவையான சத்து கிடைப்பதுடன், புற்றுநோய் செல்களிடம் இருந்தும் உடலை பாதுகாக்கிறது. புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியை தடுப்பதோடு, நரம்பு மண்டலம் மற்றும் செல்களின் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது.
பூண்டு
பச்சை பூண்டை அப்படியே சாப்பிடுவது மிகவும் நல்லது. அழற்சியை குறைத்து, புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது. பூண்டு சுவாசம் என்பது, உடலுக்கு அற்புத ஆற்றலை அளித்து உடலில் புற்றுநோய் செல்கள் தங்காமல் அழித்துவிடுகிறது.
மைடேக் மற்றும் ஷைடேக் காளான்கள்
இவற்றில் வைட்டமின்கள் சி மற்றும் பி, கால்சியம் மற்றும் இதர கனிம சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.புற்றுநோய் செல்களை எதிர்த்து அழிக்கிறது காளானில் உள்ள லென்டினன் எனும் சத்து, புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியையும், அது உருவாவதையும் தடுக்கிறது.
திராட்சை
திராட்சை புற்றுநோயை தடுக்கிறது. திராட்சையில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்டும், புற்றுநோய் ஏற்படாமலும், அப்படி உருவானால் அதன் வளர்ச்சியை தடுக்கும் வகையிலும் உள்ளன. மார்பக புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், வயிற்று புற்றுநோய் போன்றவை தடுக்கக்கூடியது.
பச்சை இலை காய்கறிகள்
முள்ளங்கி, ப்ராக்கோலி, காலிப்ளவர், கிழங்கு வகைகள், முளைக்கட்டிய பயிறு வகைகள் உள்ளிட்ட காய்கறி வகைகளில் சல்பராபேன் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இவை மார்பக புற்றுநோய், மூளை புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை எதிர்த்து போராடி உடலை காக்கிறது. அடர் நிற காய்கறிகளில் உள்ள இன்டோல் 3 கார்பினால் உடலில் புற்றுநோய் செல்களை வளர்க்கும் காரணிகளை அழிக்கிறது.
ஃபோலேட் நிறைந்த உணவுகள்
அவகேடோ, ஆப்ரிகோட், பூசணி மற்றும் பச்சை இலை காய்கறிகள், கோழியின் கல்லீரல் போன்றவை ஃபோலேட் நிறைந்த உணவுகளாகும். இது பெருங்குடல் புற்றுநோயை தடுக்கும். இயற்கை முறையில் ஃபோலேட்டை எடுத்துக் கொள்ளும் போது மட்டுமே புற்றுநோயை அது தடுக்கும்.
மஞ்சள்
மஞ்சளில் உள்ள குர்குமின், புற்றுநோயை உடலின் பிற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கும். இந்தியாவில், பெரும்பாலான மக்கள் தினசரி உணவில் மஞ்சளை எடுத்துக் கொள்வதே  பெருங்குடல், புரோஸ்டேட், நுரையீரல் மற்றும் மார்பக புற்றுநோய் பாதிப்புகளை தடுப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தக்காளியில் உள்ள காராடெனாய்ட்ஸ் மற்றும் லைகோபீன் புற்றுநோயை எதிர்க்கிறது. கணையம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்க்கிறது. ஒரு வாரத்துக்கு 7 முதல் 10 தக்காளி வரை சேர்க்க வேண்டும்.




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive