கல்வி இடைநிற்றலில் மாணவர்களே அதிகம்!

பள்ளிக்கல்வியின் போது இடைநிற்றலில்
முஸ்லீம் மதத்தில் மாணவிகளை விட மாணவர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என கான்பூர் ஐஐடி ஆய்வு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, கான்பூர் ஐஐடியைச் சேர்ந்த இரண்டு ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்று சயின்ஸ்டைரக்ட் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் முஸ்லீம்களின் கல்வி கற்கும் முறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை ஆகிய பிரச்சினைகள் குறித்து தேசிய மாதிரி சர்வேயின் தகவல்களை வைத்து பகுப்பாய்வு செய்த போது முஸ்லீம் சமுதாயத்தினரின் மத்தியில் மாணவ மாணவியர் ஆகிய இரு பாலருக்கிடையே கல்வி கற்கும் நிலையில் வேறுபாடுகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. முஸ்லீம் மாணவர்கள் தங்களது குடும்பத்தை காப்பாற்ற பள்ளிக் கல்வியை முடிக்காமல் இடையிலேயே நின்று விடுகின்றனர். ஆனால் முஸ்லீம் மாணவிகள் தொடர்ந்து பள்ளிக்கல்வியை முடித்து விட்டு உயர் கல்விக்கும் செல்வதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் முஸ்லீம் மற்றும் இந்து எஸ்சி/எஸ்டி மாணவர்களும் குறைான அளவில்தான் பள்ளிக் கல்வியில் இடைநிற்றலில் குறைவானவர்களாக இருக்கின்றனர். அதே சமயத்தில் இந்து உயர் சாதியினரிடையே கல்வி இடைநிற்றலில் அதிகமானவர்கள் உள்ளனர். நகரப்புறங்களில் அனைத்து சமூகத்தினர், மதத்தினரிடையே பள்ளிக் கல்வி இடைநிற்றலில் அதிகமானவர்கள் உள்ளனர். ஆனால் உயர் சாதியினர் மத்தியில் பள்ளிக் கல்வி இடைநிற்றல் குறைவாக உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this

0 Comment to "கல்வி இடைநிற்றலில் மாணவர்களே அதிகம்! "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...