கற்றல் திறன் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு!

குரோம்பேட்டை: அஸ்தினாபுரம்,
நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், கற்றல் திறன் குறைந்த மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள்
நடத்தப்பட்டு வருகின்றன.பல்லாவரம் நகராட்சியில், ஐந்து நகராட்சி பள்ளிகள் உள்ளன. இவற்றில், அஸ்தினாபுரம் மேல்நிலைப் பள்ளியில், 660 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.இந்த பள்ளி மாணவர்கள், கடந்தாண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 93 சதவீதமும், பிளஸ் 2ல், 87 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர்.இந்தாண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில், பெற்றோரிடம் அனுமதி பெற்று, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.பள்ளி நாட்களில்,
தினமும் காலை, 8:30 முதல், 9:15 மணி வரை சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு, மாலை, 4:15 முதல்
5:15 மணி வரை, சிறப்பு தேர்வும் நடத்தப்படுகிறது.தற்போது, காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால், காலை, 9:30 முதல் மாலை, 4:00 மணி வரை, சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இதில், கற்றல் திறன் குறைவான மாணவ - மாணவியருக்கென சிறப்பு கவனம் செலுத்தி, ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

Share this

0 Comment to "கற்றல் திறன் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு!"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...