பி.எஸ்.என்.எல். நிறுவன
பயனர்களுக்கு ரூ.18 விலையில் அன்லிமிட்டெட் வீடியோ கால் வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 18-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் ரூ.18 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ரூ.18 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அன்லிமிட்டெட் வீடியோ கால் மற்றும் அன்லிமிட்டெட் டேட்டா உள்ளிட்டவை இரண்டு நாட்களுக்கு வழங்கப்படுகிறது. புதிய சலுகை மட்டுமின்றி பி.எஸ்.என்.எல். பிரீமியம் ரீசார்ஜ் சலுகைகளில் 18% வரை கூடுதல் டாக்டைம் மற்றும் டேட்டா வழங்குகிறது.
பி.எஸ்.என்.எல். ரூ.1,801 சலுகையில் ரூ.2,125 டாக்டைம், 15 ஜி.பி. டேட்டா, ரூ.1,201 சலுகையில் ரூ.1,417 டாக்டைம் மற்றும் 10 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. புதிய அறிவிப்பு ரிலையன்ஸ் ஜியோவின் மலிவு விலை சலுகைகளுக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். அறிவித்திருக்கும் ரூ.18 சலுகை ஜியோ வழங்கி வரும் ரூ.19 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஜியோ ரூ.19 சலுகையில் 0.15 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 20 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
இதுதவிர, பி.எஸ்.என்.எல். வழங்கும் இதர சலுகைகளில் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ரூ.1,801 சலுகையில் ரூ.2,125 டாக்டைம், மற்றும் 15 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. ரூ.1,201 சலுகையில் ரூ.1,417 டாக்டைம், மற்றும் 10 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இதேபோன்று ரூ.601 சலுகையில் ரூ.709 டாக்டைம் மற்றும் 5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
பி.எஸ்.என்.எல். ரூ.18 சலுகை அக்டோபர் 1-ம் தேதி முதல் அக்டோபர் 18-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. முன்னதாக பி.எஸ்.என்.எல். போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு ரூ.299 சலுகை அறிவிக்கப்பட்டது. இதில் பயனர்களுக்கு 31 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...