புத்தக திருவிழாவில் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்

தேவகோட்டை  புத்தக திருவிழாவில்
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் தேவகோட்டை பதிப்பாளர் சங்கம் சார்பில் நடந்து வரும் புத்தக திருவிழாவை
பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி சென்றனர்.
                              தேவகோட்டையில் பதிப்பாளர் சங்கம் சார்பில் நடந்து வரும் புத்தக திருவிழா பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.இதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் மாணவ,மாணவியர் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் புத்தகத் திருவிழாவை காண சென்றனர்.ஆசிரியை செல்வ மீனாள் ,ஆசிரியர்கள் கருப்பையா, ஸ்ரீதர் ஆகியோர் அழைத்து சென்றனர்.மாணவ,மாணவியர் மிகுந்த மகிழ்ச்சியுடன் புத்தக திருவிழா ஸ்டால்களை பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி சென்றனர்.
                              
பட விளக்கம்: தேவகோட்டையில் நடந்து வரும் பிருமாண்டமான புத்தக திருவிழாவில் ஸ்டால்களில் புத்தகங்களை தேர்வு செய்ய ஆர்வத்துடன் குவிந்துள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மணவ,மாணவியர்.Share this

1 Response to "புத்தக திருவிழாவில் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்"

Dear Reader,

Enter Your Comments Here...