ஆதிதிராவிடர் நலப்பள்ளி விடுதி மற்றும் பள்ளி கட்டடங்கள் திறப்பு

ஆதிதிராவிடர் நலப்பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கான, பத்து விடுதி கட்டடங்கள் மற்றும் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடங்களை, முதல்வர் பழனிசாமி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார்.


சேலம் மாவட்டம், ஆத்துார்; ராமநாதபுரம் மாவட்டம், நீராவி உள்ளிட்ட இடங்களில், 11.34 கோடி ரூபாய் செலவில், மாணவ - மாணவியருக்கான விடுதி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அரியலுார் மாவட்டம், வெத்தியார்வெட்டு; திருவாரூர் மாவட்டம், அபிஷேக கட்டளை; காஞ்சிபுரம் மாவட்டம், தைய்யூர், மீனம்பாக்கம், அனகாபுத்துார்; சேலம் மாவட்டம், சிக்கனம்பட்டியில் 4.32 கோடி ரூபாய் செலவில், கூடுதல் கட்டடங்கள் மற்றும் அறிவியல் ஆய்வுக் கூடங்கள் கட்டப்பட்டு உள்ளன.

இவை அனைத்தையும், முதல்வர் பழனிசாமி, நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், ராஜலட்சுமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Share this