விருதுநகர் மாவட்டம், திருவில் லிபுத்தூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில் பாம்புகள் புகுந்ததால் ஆசி ரியர்களும், மாணவர்களும் அச்ச மடைந்துள்ளனர்.
திருவில்லிபுத்தூர் அருகே உள்ள நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 90 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பள்ளி வளாகம் மற்றும் கழிப்பறைக்குள் பாம்புகள் புகுந்ததால் பரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் நேச்சுரல் பாய்ஸ் இளைஞர் நற்பணி மன்றத்தினர், அன்னை தெரஸா மகளிர் மன்றத்தினர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித் துறை அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 4 கழிப்பறைகள் உள்ளன.
இவை நீண்டகாலமாக சுத்தப் படுத்தப்படாமல் துர்நாற்றம் வீசு கிறது. கடந்த பருவத்தில் இரு பாம்புகள் பள்ளி வளாகத்துக்குள் வந்தன. நடப்பு பருவம் கடந்த 3-ம் தேதி வகுப்புகள் தொடங்கிய நிலையில் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த இடத்தில் பாம்பு புகுந்தது.நேற்று முன்தினம் (23-ம் தேதி) காலை பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் இரு பாம்புகள் இருந்தன. அவற்றை கிராம இளைஞர்கள் இருவர் அப்புறப்படுத்தினர். சிறிது நேரத்திலேயே மாணவர்கள் கழிப் பறை அருகே உள்ள குழாயின் கீழ் பாம்பு ஒன்று கிடந்துள்ளது.
பள்ளி வளாகத்தில் தொடர் ச்சியாக பாம்புகள் வருவதால் மாணவர்களும், ஆசிரியர்களும் அச்சத்தில் உள்ளனர்.
எனவே சுகாதாரப் பணியில் அலட்சியம் காட்டாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப் பிட்டிருந்தனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...