கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு தொடக்க பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் கல்விதுறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து 126 பள்ளிகளில் திடீர் ஆய்வில் ஈடுப்பட்டனர்.
முதன்மை கல்வி அலுவலர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வில், 2 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் பேச்சு, எழுத்து உள்ளிட்ட கல்வித் திறனை பற்றி ஆராய்ந்தனர். பின்னர் விருத்தாச்சலம் தனியார் மண்டபத்தில் நடந்த திறன் மேம்பாட்டு மேலாய்வு கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் எந்தெந்த பள்ளிகள் மாணவர்கள் கல்வி திறனில் குறைவாக உள்ளார்கள் என்றும், அப்பள்ளி மாணவர்களை எவ்வாறு முன்னேற்றமடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...