காலாண்டு தேர்ச்சிகுறித்து உதவிபெறும் பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு


மதுரை மாவட்டத்தில் அரசு, உதவிபெறும் பள்ளிகளின் காலாண்டு தேர்ச்சி குறித்து கலெக்டர் நடராஜன் இன்று (அக்.,17) ஆய்வு செய்கிறார்.கலெக்டராக பொறுப்பேற்ற நடராஜன், செப்.,7 தலைமையாசிரியர்கள் கூட்டத்தில், ''மாநில அளவில் ஐந்து ரேங்கிற்குள் மதுரை இடம் பெற வேண்டும். 6-8ம் வகுப்பு மாணவர்களின் வாசிப்பு, எழுதும் திறனை அதிகரிக்க வேண்டும்,'' என உத்தரவிட்டார். ''இதை கல்வித்துறை பின்பற்றுகிறதா என மீண்டும் ஆய்வு நடத்தப்படும்,'' என எச்சரித்தார். இதன்படி கல்வி மாவட்டங்கள் வாரியான ஆய்வு கூட்டத்தை கலெக்டர் இன்று நடத்துகிறார்.சி.இ.ஓ., கோபிதாஸ், ''மாவட்ட தேர்ச்சியான பத்தாம் வகுப்பு 95 சதவீதம், பிளஸ் 2வில் 93 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியர்கள், சம்மந்தப்பட்ட பாடஆசிரியர்கள்ஆய்வில் பங்கேற்க வேண்டும். பாடம் வாரியாக காலாண்டு தேர்வு தேர்ச்சி விபரப் பட்டியல் கொண்டுவர வேண்டும்,'' என தெரிவித்துள்ளார்.

Share this