சமூக வலைத்தளங்களில்
உண்மையான தகவல்களை விட பொய்த் தகவல்கள்தாம் வேகமாகப் பரவுகின்றன. அதுவும் பொய்த் தகவல்களைக் கண்டுபிடிப்பது என்பது முகநூல் (ஃபேஸ் புக்), சுட்டுரை (டிவிட்டர்) போன்ற பெரிய நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது.அரசியல்வாதிகள், சமூகத்தில் பெரும் அந்தஸ்தில் உள்ளவர்கள் ஆகியோரை மையப்படுத்தியே இந்தப் பொய்த் தகவல்கள் பரப்பப்படுகின்றன. அதுவும் தேர்தல் நேரங்களில் கேட்கவே வேண்டாம். ஊடகங்களின் பெயர்களைக் குறிப்பிட்டே பொய்த் தகவல்கள் வெளியாகின்றன. அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என்பதற்காகவும், நிறைய லைக்குகள் பெற வேண்டும் என்பதற்காகவும் இதுபோன்ற பொய்த் தகவல்களை சிலர் வெளியிடுகின்றனர். .
பொய்த் தகவல்களை வெளியிடுபவர்களைப் பிடிக்க முடியவில்லை என்றாலும் அவர்கள் வெளியிடும் பொய்த் தகவல்களின் உண்மைத் தன்மையைக் கண்டுபிடிக்க முகநூல் நிறுவனம் புதிய முயற்சியைக் கையாண்டுள்ளது. .
முகநூலில் பரவும் புகைப்படம், விடியோக்களின் உண்மைத் தன்மையைக் கண்டுபிடிப்பதுதான் அந்த புதிய திட்டம். இதற்காக உலகம் முழுவதும் 17 நாடுகளில் 27 மையங்களை அந்த நிறுவனம் அமைத்துள்ளது. .
முகநூலில் வேகமாகப் பரவும் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றின் உண்மைத்தன்மையை இந்த மையங்களில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் .
ஆராய்வார்கள். அவர்கள் அந்த புகைப்படம், வீடியோ உண்மையில் எங்கு எப்போது யாருடன் எடுக்கப்பட்டது என்பதை நவீன தொழில்நுட்பத்தின் துணைகொண்டு கண்டுபிடிப்பார்கள். .
இந்தப் பொய்த் தகவல்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. அமெரிக்காவில் பெரும்பாலும் செய்திகளின் வடிவிலும், இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் புகைப்பட வடிவங்களிலும் பொய்த் தகவல்கள் பரப்படுகின்றன. இவற்றை நவீன தொழில்நுட்ப உதவியுடன் கண்டுபிடிக்கும் முகநூல் நிறுவனம், அவற்றை பரவச் செய்வதையும் தடுக்கிறது. இதுதொடர்பாக மக்களிடம் கருத்துகளையும் முகநூல் நிறுவனம் கேட்டறிகிறது. .
சமூக வலைத்தளங்களில் பொய்த் தகவல்கள் வேகமாக பரவுவதற்கு அதில் உறுப்பினர்களாக உள்ள ஒவ்வொருவரும் காரணமாகிறோம். இதுபோன்ற பொய்த் தகவல்களுக்கு நாம் பலியாவதைத் தடுக்க புகைப்படங்களின் உண்மைத் தன்மையை தெரிந்து கொள்ள கூகுளில் "ரிவேர்ஸ் இமேஜ்' என்று டைப் செய்து அந்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்து உண்மையைக் கண்டுபிடித்து விடலாம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...