எல்.கே.ஜி., பாடத் திட்டம் குறித்து, பொதுமக்கள் கருத்துகளை கூறுவதற்கான அவகாசம், மூன்று நாட்களில் முடிகிறது.தமிழக பள்ளி கல்வி துறையில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, நடப்பு கல்வி ஆண்டில், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. 


மற்ற வகுப்புகளுக்கு, அடுத்த ஆண்டு புதிய பாடத் திட்டம் அமலாகிறது. இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறையில் இருந்து, அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், 'ப்ரீ.கே.ஜி., - எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளுக்கு, நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.இதன்படி, தமிழக பள்ளி கல்வியின் கட்டுப்பாட்டில் உள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சிலான, எஸ்.சி.இ.ஆர்.டி., புதிய பாட திட்ட வரைவு அறிக்கையை தயாரித்துள்ளது. 
இதன் விபரங்கள், http://www.tnscert.orgஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.வரைவு அறிக்கையில் உள்ள அம்சங்களில், எதை சேர்க்க வேண்டும்; எதை நீக்க வேண்டும்; எந்த பகுதிகள் வேண்டாம் என, பொதுமக்கள், கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கலாம். இதற்கான அவகாசம், இன்னும் மூன்று நாட்களில் முடிகிறது. கருத்துகளை, awpb2018@gmail.com என்ற, 'இ-மெயில்' முகவரிக்கு, வரும், 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

1 comment:

  1. Sri ethu nallathitam kandipa LKG UKG. Ella gov. Schoolaiu .vendum ennoda paiyan palvadi padikeran aduthu lkg .UKG arabicha .romba .Nallathu

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments