ரயில்களின்
நேரம், அதிகாரிகள், ஸ்டேஷன் எண்கள் உள்ளிட்டவற்றை அறிய, தனியார்
நிறுவனங்கள் மொபைல் போன் செயலிகளை அறிமுகம் செய்கின்றன. ஆனால், ரயில்வே
சார்பில், அவ்வப்போது புதுப்பிக்கப்படும் தகவல்கள், இச்செயலியில்
இடம்பெறாததால், பயணியர் குழப்பமடைகின்றனர்.
அதனால், பயணியர் வசதிக்காக, அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய, 'ரயில் பார்ட்னர்' எனும் மொபைல் போன் செயலியை, தெற்கு ரயில்வே, முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது. இதில், டிக்கெட் முன்பதிவு விபரம், சிறப்பு ரயில்கள், உதவி அழைப்பு எண்கள், சலுகைகள் உள்ளிட்ட அனைத்தும், இடம் பெற்றுள்ளதால், பயணியரிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...