25 விளையாட்டு அலுவலர்கள் பணியிடங்கள் காலி

25 விளையாட்டு அலுவலர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதால், அத்துறையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.இளைஞர் நலம், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்டம் தோறும், விளையாட்டு மைதானங்கள் உள்ளன. மாவட்ட விளையாட்டு அலுவலர் தலைமையில், பயிற்சியாளர்கள் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். 


பல்வேறு போட்டிகளும் நடைபெறுகிறது.இத்துறையில் மாவட்ட விளையாட்டு அலுவலர்கள், சீனியர் மேலாளர்கள், மேலாளர்கள் என, 25க்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரு மாவட்ட அலுவலரே, இரண்டு, மூன்று மாவட்டங்களை, கூடுதல் பொறுப்பாக கவனிக்கின்றனர். விருதுநகர் அலுவலர், கூடுதல் பொறுப்பாக, மதுரை மற்றும் விளையாட்டு விடுதியை கவனிக்கிறார். கன்னியாகுமரி அலுவலர், துாத்துக்குடி; ராமநாதபுரம் அலுவலர், திருநெல்வேலி; திருவாரூர் அலுவலர், பெரம்பலுார் மாவட்டங்களை கூடுதல் பொறுப்பாக கவனிக்கின்றனர்.

Share this