புதுமை ஆசிரியர் விருதுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 5 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் புதுமை ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சமுதாயத்தில் மாணவர்களின் சுய ஒழுக்கம் மற்றும் கல்வி முன்னேற்றத்துக்காக கற்பித்தலில் முதலீடு இல்லாமல் புதுமையான முயற்சிகளை ஆசிரியர்களிடம் ஊக்குவிக்க மாநிலம் முழுவதும் 1 முதல் 8-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு சமகர சிகஷா அபியான் மற்றும் ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டியும் இணைந்து கடந்த ஆண்டு பயிற்சி வழங்கப்பட்டது.

இப்பயிற்சியில் பங்கு பெற்று சிறந்த முயற்சிகளை மேற்கொண்டு புத்தாக்கங்களை சமர்ப்பித்த ஆசிரியர்களுள், தேசிய அளவில் கவுரவிக்கப்பட்ட 23 ஆசிரியர்கள் மற்றும் சிறந்த முயற்சிகளை மேற்கொண்ட 500 ஆசிரியர்களையும் சேர்த்து மொத்தம் 523 ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சென்னையில் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ள விழாவில் புதுமை ஆசிரியர் விருதும், பாராட்டு சான்றிதழும் வழங்க உள்ளார். மேலும், மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்க உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த விருதுக்கு கண்ணக்கன்காடு அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் எஸ்.ரவி, கம்மங்காடு அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியை சி.மைதிலி, சித்தக்கூர் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் எ.செல்வராஜ், உருவம்பட்டி அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் முனியசாமி, செட்டிக்காடு அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் சி.ரீனா ரோசிலின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

புதுமை விருதுக்கு தேர்வுக்கு செய்யப்பட்டுள்ள சக ஆசிரியர்கள் மற்றும் மாணர்களின் பெற்றோர் பாராட்டுத் தெரித்தனர் .

Share this

0 Comment to "புதுமை ஆசிரியர் விருதுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...