தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம், ஜூன், 7ல் துவங்கி, 20ல் முடிவடைந்தது. 'நீட்' நுழைவுத்தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்தனர்.இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, தகுந்த ஆவணங்களுடன் நேரிலும், தபால் வாயிலாகவும், சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவ கல்வி இயக்குனரக அலுவலகத்தில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல், 2ம் தேதி வெளியிடப்பட்டு, முதற்கட்ட கவுன்சிலிங், நேற்று துவங்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், விண்ணப்ப பரிசீலனையில் தாமதம் ஏற்பட்டதாக கூறி, பட்டியல்வெளியீடு நிறுத்தப்பட்டது.தற்போது, விண்ணப்பங்கள் பரிசீலனை முடிந்து, தர வரிசை பட்டியலையும், மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவினர் தயாரித்துள்ளனர். பட்டியலை வெளியிடுவதற்கு, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர், நேரம் ஒதுக்காததால், தாமதம் ஏற்படுவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.