கற்பித்தல் முறைகள்@பதிவேடுகள்
குறித்து வகுப்பு 1 முதல் 3 வரை (ABL New approach) வகுப்பு 4 முதல் 5 வரை (SALM) மாவட்ட மற்றும் வட்டார கருத்தாளர்கள்@அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி , மாநிலத்திட்ட இயக்கக (SPD) அலுவலகமானது  தெரியப்படுத்தாமல் இருப்பதோடு தகவல்கள் கேட்பவருக்கும் பதிவேடுகள் குறித்த தகவல்கள் இவ்வலுவலகத்தில் இல்லை, தொடக்கக் கல்வித்துறையினை அணுகுமாறு கேட்டுக்கொண்டால்? 

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி , மாநிலத்திட்ட இயக்ககத்தின் (SPD)  கீழ் பணியாற்றக்கூடிய மாவட்ட மற்றும் வட்டார அலுவலர்கள் பள்ளிப்பார்வையின் போது பதிவேடுகள் குறித்து ஆசிரியர்களிடம் எவ்வாறு வினா எழுப்ப இயலும்?

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி , மாநிலத்திட்ட இயக்கக (SPD) அலுவலகமானது  பதிவேடுகள் குறித்த தகவல்கள் இவ்வலுவலகத்தில் இல்லை எனும்போது நம் ஆசிரிய பெருமக்கள் ஏன் பல்வேறு வகையான பதிவேடுகள் (ஏறக்குறைய 53) பராமரிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள் என்று தெரியவில்லை.

நம் இனச்சொந்தங்களே எழுத்துப்பூர்வமான , முறையான தகவல்கள் கிடைக்கப்பெறாமல் சமூக வலைதளங்களில் பரப்புரை செய்யாதீர்கள் எனக் கேட்டுக்கொண்டு, பதிவேடுகள் குறித்து எழுத்துப்பூர்வமான தகவல்களை கல்வித்துறையானது வருங்காலங்களில் வழங்கும் என நம்பிக்கை கொண்டிருப்போம்...

இவண்:-
மா.முருகேசன்,
அரசுப்பள்ளி ஆசிரியர்,
தூத்துக்குடி.
 
 
 

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments