NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC Group 4 Exam: தேர்வறையில் நீங்கள் எதையெல்லாம் கொண்டு செல்லக் கூடாது?


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர், டைப்பிஸ்ட், பீல்டு சர்வேயர் உள்ளிட்ட 6.491 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு, செப்டம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
டிஎன்பிஎஸ்சி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒரே ஷிப்டில் இத்தேர்வை  நடத்த விருக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட் ஆகஸ்ட் 22 அன்று  வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட உள்ளன. இதில் பொது தமிழ் / பொது ஆங்கில பிரிவில் 100 கேள்விகளும், திறனாய்வு மற்றும் மன திறன் பிரிவில் 25 கேள்விகளும், பொது அறிவு  பிரிவில் 75 கேள்விகளும் உள்ளடக்கம்.
தேர்வர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் பின்வருமாறு:
இந்நிலையில் இத்தேர்வின் கலந்துகொள்ளும் தேர்வர்கள், டி.என்.பி.எஸ்.சி யின் அதிகாரப்பூர்வ  அறிவிப்பின்படி-செல்லுலார் தொலைபேசி, கைக்கடிகாரங்கள்,புளூடூத் சாதனங்களை கொண்டுவர அனுமதிக்கப்படமாட்டார்கள. மேலும், தேர்வர்கள் தங்கள்  வாட்ச் அல்லது மோதிரத்தில் ஏதேனும் மறைமுக வழியில் மின்னணு சாதனத்தை பயன்படுத்தக் கூடாது என்பதும்  டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவுப்பில் சொல்லப்பட்ட ஒன்றாகும் .
புத்தகங்கள்,நோட்டுத் தாள்கள்,துண்டுத் தாள்கள், மின்னணு அல்லது வேறு எந்த வகையான கால்குலேட்டர்கள்,பதிவு அட்டவணைகள், அனுமதிக்கப்பட்ட பேனாவைத் தவிர மற்ற  கலர் பேனா மற்றும் பென்சில் போன்றவைகளை முற்றிலும் தவிர்க்கும் மாறும் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பு கூறுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive