பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வரும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பின் (ஐஎஸ்எஸ்எப்) உலகக்கோப்பை போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
10 மீ ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் சீனியர் பிரிவில் ஏற்கெனவே அபூர்வி சண்டிலா, அஞ்சலி பகவத் ஆகியோர் மட்டுமே தங்கம் வென்றிருந்த நிலையில் 3-வது வீராங்கனையாக இளவேனில் உயர்ந்துள்ளார்.
தமிழகத்தில் கடலூரைச் சேர்ந்த இளவேனில் வாளறிவன் 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கத்தைக் கைப்பற்றியுள்ளார். இளவேனில் தற்போது குஜராத்தின் அகமதாபாத் நகரில் வசித்து வருகிறார்.
தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்.
கடந்த 2018-ம் ஆண்டு ஜூனியர் உலகக்கோப்பை போட்டியில் இளவேனில் தங்கம் வென்ற நிலையில் சீனியர் பிரிவில் முதல் முறையாக இந்த ஆண்டு அறிமுகமாக தங்கம் வென்றார். இதுமட்டுமல்லாமல் உலக பல்கலைக்கழகங்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலும் இளவேனில் இந்த ஆண்டு வெள்ளி வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments