Padasalai Guides - Public Exam Question Bank - Sales

Padasalai Guides - Public Exam Question Bank - Sales

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"கணினி வழியில் பாடம், நவீனக் கழிப்பறை வசதி"! அசத்தும் வடசிறுவளூர் அரசுப் பள்ளி

அரசுப்பள்ளிகளில் வேலை செய்யும் எல்லா ஆசிரியர்களுமே அதற்கான தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுதான் வேலைக்கு வந்திருக்காங்க. தேசிய தலைவர்கள், பெண் கல்வியை வலியுறுத்தும் மதில் சுவர் ஓவியங்கள். கணினி அறை, நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறை, விளையாட்டுச் சாதனங்களுடன் கூடிய மைதானம் என்று அதிநவீன மாற்றங்களைத் தாங்கி நிற்கிறது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வடசிறுவளூர் கிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. காலை 10 மணிக்கு பள்ளிக்குள் நுழைந்தோம். ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் புத்தகத்தில் உள்ள பாடங்களை வீடியோ வாயிலாக விளக்கிக்கொண்டு இருந்தார் பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்த மாற்றங்களுக்காகத்தானே பெற்றோர்கள் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளிலும், டியூஷன்களிலும் சேர்த்துவிடுகின்றனர். இவையெல்லாம் ஓர் அரசுப்பள்ளியில் எப்படி சாத்தியம்? எனத் தலைமை ஆசிரியரிடம் கேட்டோம்.
"தனியார் பள்ளிகளை விட அரசுப்பள்ளிகளில் வசதி குறைவுதான் என்றாலும் பல திறமையான ஆசிரியர்கள் ஒன்றிணைந்தது அரசுப்பள்ளி என்பது மறுக்க முடியாத உண்மை. அரசுப்பள்ளிகளில் வேலை செய்யும் எல்லா ஆசிரியர்களுமே அதற்கான தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுதான் வேலைக்கு வந்திருக்காங்க. அதனால் எல்லா ஆசிரியர்களுமே திறமையானவர்கள் தான். ஆனால், மக்களுக்குத் திறமையான ஆசிரியர்களிடம் தங்கள் குழந்தை பாடம் கற்கிறார்கள் என்பதை விட எதிர்காலம் குறித்த பயம் நிறைய இருக்கு. அதான் தனியார் பள்ளிகளை தேடிப்போறாங்க. எங்கள் பள்ளியில் தனியார் பள்ளிகளில் இருப்பது போன்று அத்தியாவசியமான மாற்றங்களைக் கற்பிக்கும் முறைகளையும் கொண்டு வரணும்னு நாங்க எடுத்த மாற்றத்தைத் தான் நீங்க இப்போ பார்க்கிறீங்க. இந்த மாற்றங்களில் எங்கள் பள்ளியில் இருக்கும் எல்லா ஆசிரியர்களின் உழைப்பு இருந்தாலும் எங்கள் எல்லாரையும் ஒன்று சேர்த்து மாற்றத்திற்கான விதையை விதைத்தவர் இடைநிலை ஆசிரியர் ராஜேஷ்தான். மாணவர்களின் நலனுக்கு என்னென்ன அப்டேட்களை பள்ளியில் கொண்டு வர முடியும். அதையெல்லாம் எப்படி சாத்தியப்படுத்தலாம் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தவர் அவர்தான்"என ஆசிரியர் ராஜேஸை அறிமுகம் செய்து வைத்தார் தலைமை ஆசிரியை பத்மாவதி." இது எங்கள் மாணவர்களின் நலனுக்கான கூட்டு முயற்சி" என புன்னகை பொங்கப் பேச ஆரம்பித்தார் ராஜேஷ். நிறைய மக்கள் இப்போ ஆன்லைன் மூலமாக வீட்டில் பாடம் சொல்லித் தரும் பைஜூ போன்ற ஆப்களுக்கு மாதம் ஆயிரக்கணக்கில் கட்டணம் கட்டிட்டு இருக்காங்க. ஆனால், எங்கள் பள்ளியில் மாணவர்களின் பாடப்புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு பாடத்தையும் கணினி பயன்படுத்தி வீடியோ மூலமாக கத்துக்கொடுத்துட்டு இருக்கோம்.
அரசுப்பள்ளிகளில் ஒவ்வொரு வருஷமும் மாணவர்கள் எண்ணிக்கை குறைஞ்சுட்டேதான் இருக்கு. எந்தப் பெற்றோர்களும் அரசுப்பள்ளி பிடிக்காமல் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறது இல்ல. தங்களோட குழந்தைகளுக்குச் சிறப்புக் கவனம் வேணும், போட்டிகள், பங்கெடுப்புகள் என வாய்ப்புகள் வேணும்னுதான் பல லட்சங்களை கொடுத்து தனியார் பள்ளிகளில் சேர்க்கிறாங்க. உண்மையைச் சொல்லணும்னா சில வருஷங்களுக்கு முன்பு வரை தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு மாணவருக்கும் தனிக்கவனம் இருந்துச்சு. அதனால் மக்கள் எல்லோரும் தனியார் பள்ளிகளைத் தேடிப்போக ஆரம்பிச்சாங்க. ஆனால், இப்போ நிலைமை தலைகீழாக மாறிப்போச்சு. அதிக கட்டணங்களுக்கு ஆசைப்பட்டு இப்போ தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பறையிலும் 60 மாணவர்கள் வரை அட்மிஷன் போடுறாங்க. அப்புறம் எப்படி ஒவ்வொரு பசங்களுக்கும் சிறப்புக் கவனம் செலுத்த முடியும். ஆனால் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் வகுப்பறையில் இருக்கும் இருபது பேருக்கும் தனிக்கவனம் கொடுத்து பார்த்துட்டு இருக்கோம். இன்னும் சில பெற்றோர்கள் அரசுப்பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்சிகள் இருக்காதுனுதான் தனியார்பள்ளிகளைத் தேடிப்போறாங்க. அதைச் சாத்தியப்படுத்தினால் எப்படி இருக்கும் என்ற சின்ன ஆசைதான் எங்களுடைய பள்ளிக்கான மாற்றமாக அமைந்தது என மாற்றத்தின் ஆரம்பத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார் ஆசிரியர் ராஜேஷ். "நான் இந்தப்பள்ளியில் 2011 ம் ஆண்டுக்கு வேலைக்குச் சேர்ந்தேன். பழங்குடி மக்கள் பெரும்பாலானோர் வாழும் கிராமம் என்பதால் பசங்களை பள்ளிக்குத் தொடர்ச்சியாக வரவைப்பதே பெரிய சவாலான ஒன்றாக இருக்கும். எல்லோர் வீட்டிலும் கால்நடைகள் வளர்ப்பாங்க. தெரு விளக்கு வசதி இல்லாத ஊர் என்பதால் இரவு நேரத்தில் யாராவது கால்நடைகளை திருடிற கூடாதுனு பசங்களைதான் காவலுக்கு வைப்பாங்க. இரவு முழுக்க காவலுக்கு நின்ன பசங்க காலையில் ஸ்கூலுக்கு வரமாட்டாங்க. வந்தாலும் தூங்கிட்டு இருப்பாங்க. இதுவே தினமும் வாடிக்கையாகும் போது ஆசிரியர்களுக்கு தங்களோட பணி மீது ஈடுபாடு குறைய ஆரம்பிச்சுரும். அதை நானும் அனுபவிச்சுருக்கேன்
இந்த நிலைமையை மாத்தணுங்கிறதுக்காக, எங்க பள்ளியில் இருந்து வீடு வீடாகப் போயி விழிப்புணர்வு ஏற்படுத்த ஆரம்பிச்சோம். ஊர் முழுவதும் பள்ளியின் சார்பாகத் தெரு விளக்குகளுக்கு ஏற்பாடு செய்தோம். பசங்களை பள்ளியில் சேர்க்கணும்ங்கிறதுக்காக வீட்டுக்குப் போயி மாலை போட்டு மரியாதை செலுத்தி அட்மிஷன் போட்டு கூட்டிட்டு வருவோம். ஒவ்வொரு வருஷமும் அந்த நிகழ்வு திருவிழா மாதிரி நடக்கும். அதில் விருப்பமுள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்துக்கொள்வதற்காக தங்களால் முடிந்த குடம், சாக்பீஸ் டப்பா, குப்பைத் தொட்டிகளை பள்ளிக்குச் சீர்வரிசையாக கொடுப்பாங்க. இது போன்ற செயல்பாடுகளால் மாணவர்களின் சேர்க்கை பள்ளியில் அதிகரிக்க ஆரம்பிச்சுது. மாணவர்களின் எண்ணிக்கையைப் பள்ளியில் தக்க வைத்துக்கொள்ள மாநில அளவிலான போட்டிகளில் கலந்துக்க ஆரம்பிச்சோம். அப்போதான் `டிசைன் ஃபார் சேஞ்'என்ற இந்திய அளவிலான கண்டுபிடிப்புக்கான போட்டி பற்றித் தெரிய வந்துச்சு. முழுக்க வீணான காகிதங்களைப் பயன்படுத்தி உருவாக்கிய எளிதில் மக்கும் குப்பைத்தொட்டிகளை மாணவர்கள் உருவாக்குனாங்க. போட்டியில் கலந்துக்கப் போறோம் என்பதை விட மாணவர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்கணுங்கிறதுதான் எங்களுடைய நோக்கமாக இருந்துச்சு. போட்டி குஜராத்தில் வைத்து நடைபெற்றது. ஒரு ஆசிரியர், ஒரு மாணவருக்கான கட்டணம் போட்டி நடத்தும் நிறுவனம் சார்பாக கொடுக்கப்பட்டது. ஆனால் எங்க பள்ளியிலிருந்து 4 மாணவர்களை ஆசிரியர்களின் சொந்தச் செலவில் கூட்டிட்டுப் போனோம். பரிசு கிடைக்கலைனாலும் எங்கள் பள்ளியிலிருந்து மாணவர்களுக்குப் பரிசு கொடுத்து ஊக்கப்படுத்தினோம்.
போட்டியில் கலந்துகிட்ட மாணவர்கள் தங்களுடைய அனுபவத்தை மற்ற மாணவர்களிடம் பகிர்ந்துகொள்ள, அடுத்த வருடம் நாங்கள் சொல்லாமலே நிறைய மாணவர்கள் புது புது ஐடியாக்களை கொடுத்தாங்க. அடுத்தடுத்து மூன்று வருஷம் தொடர்ந்து கலந்துகிட்டு முதல் இருபது இடத்திற்குள் எங்கள் பள்ளி வந்துச்சு. அப்போதுதான் ஜப்பானிலிருந்து ஒருத்தர் பள்ளிக்கு உதவி பண்ணுவதாகச் சொல்லி ரூ. 1,80,000 பணம் கொடுத்தார். கிராம கல்விக் குழு, கிராமமக்கள் நண்பர்கள், ஆசிரியர்கள் என எல்லார்கிட்டயும் சேர்த்து ஐந்து பட்சம் ரூபாய் சேகரிச்சு, அரசின் தன்னிறைவுத்திட்டத்தின் கீழ் கொடுத்து 15 லட்சம் ரூபாய் வாங்கினோம். வடசிறுவளூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு தொழிலதிபரும் 20 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவுனாங்க. மொத்த தொகையை வெச்சு பள்ளிக்கு கணிப்பொறி லேப்பும், கழிப்பறை வசதியையும் நடைமுறைக்குக் கொண்டு வரணும் என்பதை பிளான் பண்ணோம்.
கணிப்பொறி லேப்பை உருவாக்கி ஸ்மார்ட் வகுப்பறை மூலமாகப் பாடங்கள் எடுக்க ஆரம்பிச்சோம். நிறைய மக்கள் இப்போ ஆன்லைன் மூலமாக வீட்டில் பாடம் சொல்லித் தரும் பைஜூ போன்ற ஆப்களுக்கு மாதம் ஆயிரக்கணக்கில் கட்டணம் கட்டிட்டு இருக்காங்க. ஆனால், எங்கள் பள்ளியில் மாணவர்களின் பாடப்புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு பாடத்தையும் கணினி பயன்படுத்தி வீடியோ மூலமாக கத்துக்கொடுத்துட்டு இருக்கோம். அதனால் மாணவர்கள் புரிஞ்சு படிக்க ஆரம்பிச்சுருக்காங்க. மேலும் ஆங்கிலப்பயிற்சி வகுப்புகளும் தொடங்கியுள்ளோம். ஒவ்வொரு வருஷமும் தேசிய திறனாய்வுத்தேர்வுக்கு மாணவர்களைத் தயார் படுத்தி தேர்ச்சி பெற வெச்சு அவங்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்திருக்கோம். தனியார் பள்ளிகளில் இருப்பது போன்ற இருக்கைகளை லண்டன் வாழ் இந்தியர் ஒருவர் பரிசாக கொடுத்தாங்க. மதில் சுவர்களில் கான்செப்ட்களை அடிப்படையாகக் கொண்டு ஓவியங்கள் வரைந்தோம். இதனால் பள்ளியின் மொத்தத் தோற்றமும் மாறியது. அடுத்ததாக கழிப்பறை. பொதுவாகப் பள்ளிகளில் கழிப்பறை சுத்தமாக இருக்காதுங்கிறது எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். எல்லா பள்ளிகளிலுமே ஆண்களுக்கு ஒரு கழிப்பறை பெண்களுக்கு ஒரு கழிப்பறை என்று இருக்கும். அந்தச் சின்ன இடத்தில் வரிசையில் நின்று பயன்படுத்த வேண்டியிருக்கும். அதனால் சில குழந்தைகள் பள்ளிகளில் கழிப்பறைகள் பயன்படுத்துவதை தவிர்த்து வருவாங்க. அதில் மாற்றத்தை ஏற்படுத்த நினைச்சோம். ஆண் குழந்தைகளுக்குத் தனியாக பெண் குழந்தைகளுக்குத் தனியாக எனக் கழிப்பறைகள் கட்டி அதில் நிறைய கோப்பைகளை பதித்துள்ளோம். எப்போதும் தண்ணீர் வசதியுடன் கூடிய மாடர்ன் கழிப்பறைகளை பள்ளிகளில் உருவாக்கியுள்ளோம். இதற்காக தமிழக அரசின் ``தூய்மைப் பள்ளி விருது"ம் எங்களுக்கு கிடைச்சுது. எல்லா மாணவர்களுக்கும் கழிப்பறையை எப்படிச் சுத்தமாகப் பயன்படுத்துறது, கைகளை எப்படிக் கழுவுவது எனச் சுகாதாரப் பயிற்சிகளையும் கொடுத்திருக்கோம்.
அரசுப்பள்ளி: இப்போ மாநில, தேசிய அளவிலான போட்டிகளுக்கு மாணவர்களை ஆசிரியர்களின் சொந்தச் செலவில் பங்கெடுக்க வெச்சுட்டு இருக்கோம். இதனால் மாணவர்களின் சேர்க்கை பள்ளியில் அதிகரிச்சுட்டே வருது. பெற்றோர்கள் அரசுப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகள் படிப்பதை பெருமையாக எண்ணி அரசுப்பள்ளிகளில் சேர்க்க ஆரம்பித்தால் நிச்சயம் லட்சங்களைக் கொட்டி கொடுக்கத் தேவையிருக்காது. கல்விசார் மாற்றங்கள் தானாக நிகழும் என" தம்ஸ் அப் செய்கிறார் ராஜேஷ்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive